Stock News: சென்செக்ஸ் 700+ புள்ளிகள் உயர்வு; அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ டாப்!

01:37 PM May 04, 2026 | muthu kumar

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (4-5-26) உயர்வு கண்டு வருகின்றன. சென்செக்ஸ், நிப்டி ஆகிய முக்கியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் ஏற்ற நிலை கண்டுள்ளன.

சென்செக்ஸ் குறியீடு நண்பகல் 11.30 மணியாளரில் சுமார் 750.07 புள்ளிகள் உயர்ந்து 77,668.71 புள்ளிகளாகவும். நிப்டி50 குறியீடு 240 புள்ளிகள் உயர்ந்து 24,235.90 ஆகவும் உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் வங்கிகள் குறியீடான நிப்டி பேங்க் குறியீடு 549 புள்ளிகள் உயர்ந்து 55,413 புள்ளிகளாகவும், நிப்டி மிட் கேப் 704 புள்ளிகள் அதிகரித்து 60,489 புள்ளிகளாகவும் உள்ளன.

காரணம்:

இன்றைய பங்குச் சந்தை உயர்வுக்கு உள்நாட்டு, உலகளாவிய சந்தைகளை உந்தும் சக்திகள் பிரதான காரணமாக உள்ளன. கச்சா எண்ணெய் பெரும்பாலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதே, ஆகவே கச்சா விலை குறையும் போது நிறுவனங்களுக்கு லாபம் அது பங்குச்சந்தையிலும் பிரதிபலிக்கும்.

மேலும், மத்திய கிழக்குப் போர்ப் பதற்றங்கள் தணிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். இன்றைய உயர்வுக்குப் பிரதான காரணம் ஆட்டோமொபைல்ஸ், எஃப்.எம்.சி.ஜி., வங்கித் துறை பங்குகள் பெருமளவு வாங்கப்பட்டதே.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

ஹெச்.யு.எல்.

அதானி போர்ட்ஸ்

பஜாஜ் ஆட்டோ

அதானி எண்டெர்பிரைசஸ்

மாருதி சுசூகி

வேதாந்தா

பி.எச்.இ.எல்

ரிலையன்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

ஓ.என்.ஜி.சி

கோட்டக் மகீந்திரா

பார்தி ஏர்டெல்

டாக்டர் ரெட்டீஸ் லேப்

டிசிஎஸ்

சன் டிவி நெட்வொர்க்

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 4 காசுகள் பலவீனமடைந்து இன்று டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.94.95 ஆக உள்ளது.