ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 821.79 புள்ளிகள் சரிந்து 76,674.57 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 287.3 புள்ளிகள் சரிந்து 23,890.35. ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையிலான உடன்பாடு எதுவும் எட்டப்படாதது, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு நிலவி வருகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, இன்போசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 1,169.67 புள்ளிகள் சரிந்து 76,326.69 ஆகவும், நிஃப்டி 363.40 புள்ளிகள் சரிந்து 23,814.25 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஜப்பான், ஷாங்காய், தென் கொரியா, ஹாங்காங் என அனைத்திலுமே தடுமாற்றம் நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையிலான உடன்பாடு எதுவும் எட்டப்படாதது, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு நிலவி வருகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இந்துஸ்தான் யூனிலீவர்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எடர்னல்
எம் அண்ட் எம்
நெஸ்லே இந்தியா
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
என்டிபிசி
டாடா மோட்டார்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
ஏசியன் பெயின்ட்ஸ்
மாருதி சுசுகி
அதானி போர்ட்ஸ்
ஐடிசி
சன் பார்மா
டைடன் கம்பெனி
எல் அண்ட் டி
பாரதி ஏர்டெல்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.33 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan