Stock News: இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் தொடர்வது ஏன்?

03:06 PM May 07, 2026 | Jai s

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இழுபறி உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றமும் இறக்கமுமாக நிலையற்ற தன்மையே நீடிக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 7) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 160.24 புள்ளிகள் சரிந்து 77,798.28 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 30.25 புள்ளிகள் சரிந்து 24,300.70 ஆக இருந்தது.

“ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் இழுபறி, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணங்களால் நிலையற்ற தன்மையுடன் தான் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடக்கிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் எம் அண்ட் எம், என்டிபிசி, டாடா ஸ்டீல், எடர்னல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. அதானி போர்ட்ஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்திருந்தன.

இன்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 70.09 புள்ளிகள் சரிந்து 77,888.44 ஆகவும், நிஃப்டி 16.40 புள்ளிகள் உயர்ந்து 24,347.35 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றச் சூழலே நிலவியது. ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் இழுபறி, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணங்களால் நிலையற்ற தன்மையுடன் தான் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடக்கிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

எம் அண்ட் எம்

என்டிபிசி

கோடக் மஹிந்திரா பேங்க்

டாடா ஸ்டீல்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

ஐசிஐசிஐ பேங்க்

ஏசியன் பெயின்ட்ஸ்

டாடா மோட்டார்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இன்போசிஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

சன் பார்மா

பாரதி ஏர்டெல்

நெஸ்லே இந்தியா

பஜாஜ் ஃபைனான்ஸ்

டெக் மஹிந்திரா

பஜாஜ் ஃபின்சர்வ்

எஸ்பிஐ

ஆக்சிஸ் பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

மாருதி சுசுகி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஐடிசி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் யூனிலீவர்

டைடன் கம்பெனி

எல் அண்ட் டி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.65 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan