+

Stock News: ஈரானில் ‘அமைதி’ அறிகுறி - இந்திய பங்குச் சந்தையில் மீட்சி!

ஈரானுடனான அமைதிப் பேச்சில் முன்னேற்றம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தைகளில் பாசிட்டிவ் போக்கு நிலவுகிறது. அத்துடன் உள்ளூர் காரணிகளாலும் இந்திய பங்குச் சந்தைகள் மீண்டுள்ளன.

ஈரான் - அமெரிக்க பதற்றம் சற்றே தணிந்ததன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டு வருகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 6) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 657.22 புள்ளிகள் உயர்ந்து 77,675.01 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 218 புள்ளிகள் உயர்ந்து 24,250.85 ஆக இருந்தது.

“ஈரானுடனான அமைதிப் பேச்சில் முன்னேற்றம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தைகளில் பாசிட்டிவ் போக்கு நிலவுகிறது. அத்துடன் உள்ளூர் காரணிகளாலும் இந்திய பங்குச் சந்தைகள் மீண்டுள்ளன,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. மாருதி சுசுகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ஐடிசி, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 100.78 புள்ளிகள் உயர்ந்து 77,118.57 ஆகவும், நிஃப்டி 56.05 புள்ளிகள் உயர்ந்து 24,088.85 ஆகவும் இருந்தது.
sensex

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாசிட்டிவ் போக்கு நிலவியது. ஈரானுடனான அமைதிப் பேச்சில் முன்னேற்றம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தைகளில் பாசிட்டிவ் போக்கு நிலவுகிறது. அத்துடன் உள்ளூர் காரணிகளாலும் இந்திய பங்குச் சந்தைகள் மீண்டுள்ளன.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

பஜாஜ் ஃபைனான்ஸ்

டெக் மஹிந்திரா

ஐசிஐசிஐ பேங்க்

பஜாஜ் ஃபின்சர்வ்

எஸ்பிஐ

ஆக்சிஸ் பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

எம் அண்ட் எம்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

டாடா மோட்டார்ஸ்

டாடா ஸ்டீல்

ஏசியன் பெயின்ட்ஸ்

அதானி போர்ட்ஸ்

சன் பார்மா

பாரதி ஏர்டெல்

நெஸ்லே இந்தியா

கோடக் மஹிந்திரா பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

மாருதி சுசுகி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இன்போசிஸ்

ஐடிசி

என்டிபிசி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

டைடன் கம்பெனி

எல் அண்ட் டி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.06 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter