Stock News: பங்குச் சந்தையில் எழுச்சி - சென்செக்ஸ் 800+ புள்ளிகள் உயர்வு!

01:15 PM Apr 29, 2026 | Jai s

கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று குறிப்பிடத்தக்க எழுச்சி நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 358.92 புள்ளிகள் உயர்ந்து 77,245.83 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 101.2 புள்ளிகள் உயர்ந்து 24,096.90 ஆக இருந்தது.

“ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவி வரும் எழுச்சி, உள்ளூர் முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிந்திருந்தன. ஏனைய அனைத்து நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டிருந்தன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 884.25 புள்ளிகள் உயர்ந்து 77,771.16 ஆகவும், நிஃப்டி 274.05 புள்ளிகள் உயர்ந்து 24,269.75 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. எனினும், ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஜப்பான், ஷாங்காய், தென் கொரியா, ஹாங்காங் என அனைத்திலுமே ஏற்றமே நிலவுகிறது. ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவி வரும் எழுச்சி, உள்ளூர் முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது

ஏறுமுகம் காணும் பங்குகள்:

டெக் மஹிந்திரா

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் யூனிலீவர்

எஸ்பிஐ

ஆக்சிஸ் பேங்க்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இன்போசிஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

எம் அண்ட் எம்

நெஸ்லே இந்தியா

கோடக் மஹிந்திரா பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

என்டிபிசி

டாடா மோட்டார்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாடா ஸ்டீல்

ஏசியன் பெயின்ட்ஸ்

மாருதி சுசுகி

அதானி போர்ட்ஸ்

ஐடிசி

சன் பார்மா

டைடன் கம்பெனி

பஜாஜ் ஃபைனான்ஸ்

எல் அண்ட் டி

பாரதி ஏர்டெல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஐசிஐசிஐ பேங்க்

பஜாஜ் ஃபின்சர்வ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.78 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan