+

Stock News: பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 500+ புள்ளிகள் சரிவு!

வாரத்தின் முதல் நாளிலேயே இந்தியப் பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது. ஆரம்பத்தில் சற்றே உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பின்னர் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

வாரத்தின் முதல் நாளிலேயே இந்தியப் பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது. ஆரம்பத்தில் சற்றே உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பின்னர் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.6) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 296.94 புள்ளிகள் உயர்ந்து 79,520.05 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 85.2 புள்ளிகள் உயர்ந்து 24,089.95 ஆக இருந்தது.

ஆனால், சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தை வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது முதலீட்டாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 504.86 புள்ளிகள் (0.64%) சரிந்து 78,718.25 ஆகவும், நிஃப்டி 174.80 புள்ளிகள் (0.73%) சரிந்து 23,829.95 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் சாதக நிலையுடன்தான் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் பங்குச் சந்தைகளில் ஏற்றமும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் இறக்கமும் நிலவுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.

bse

ஏற்றம் காணும் பங்குகள்:

பஜாஜ் ஃபைனான்ஸ்

டைடன் கம்பெனி

ஐசிஐசிஐ பேங்க்

டெக் மஹிந்திரா

டிசிஎஸ்

எல் அண்ட் டி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இன்ஃபோசிஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

பஜாஜ் ஃபின்சர்வ்

விப்ரோ

பாரதி ஏர்டெல்

சன் பார்மா

எம் அண்ட் எம்

அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆக்சிஸ் பேங்க்

இந்துஸ்தான் யூனிலீவர்

ஏசியன் பெயின்ட்ஸ்

நெஸ்லே இந்தியா

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி ரூ.85.79 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter