+

TCS நிறுவனத்தின் நிகர லாபம் FY26 நான்காம் காலாண்டில் 12% உயர்வு!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் எதிர்பார்ப்புகளை மீறி வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 12.2% உயர்ந்து ரூ.13,718 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தி

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் எதிர்பார்ப்புகளை மீறி வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 12.2% உயர்ந்து ரூ.13,718 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.12,224 கோடியாக இருந்தது.

அதே நேரத்தில், வருவாய் 9.6% அதிகரித்து ரூ.70,698 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.64,479 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி கீர்த்திவாசன் கூறுகையில்,

“மூன்றாவது தொடர்ச்சியான காலாண்டாக வளர்ச்சியை பதிவு செய்ததில் மகிழ்ச்சி. மூன்று பெரிய ஒப்பந்தங்களும், மொத்தம் $12 பில்லியன் TCV-யும் எங்கள் ஐந்து தூண் உத்தியையும் AI-மையப்படுத்தப்பட்ட சேவைகளையும் உறுதிப்படுத்துகின்றன. முக்கிய சந்தைகள் மற்றும் பல தொழில் துறைகளில் இந்த வளர்ச்சி பரவலாக காணப்படுகிறது,” என்றார்.

ஆனால், உலகளாவிய பொருளாதார சூழ்நிலையிலிருந்து சவால்கள் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். அதேவேளை, வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தில் முதலீட்டை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

TCS COO ஆர்த்தி சுப்ரமணியன் கூறுகையில்,

“FY26 நிறுவனங்களுக்கு AI பயன்பாட்டில் முக்கியமான ஆண்டாக அமைந்தது. Q4-ல் எங்கள் AI வருவாய் ஆண்டு அடிப்படையில் $2.3 பில்லியனை கடந்தது. Enterprise transformation, digital engineering, cloud modernisation போன்ற புதிய சேவைகளில் வலுவான ஒப்பந்த வளர்ச்சி இருந்தது,” என்றார்.

FY26 முழு ஆண்டில், நிறுவனத்தின் மொத்த TCV $40.7 பில்லியனாக இருந்தது. இதில், Q4-ல் மட்டும் $12 பில்லியன் TCV பதிவாகியுள்ளது. இந்த காலாண்டில் மூன்று பெரிய ஒப்பந்தங்களும், ஆண்டில் மொத்தம் ஐந்து பெரிய ஒப்பந்தங்களும் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழு ஆண்டிற்கான வருவாய் ரூ.2,67,021 கோடியாக இருந்து, FY25-ஐ விட 4.6% வளர்ச்சி கண்டுள்ளது. நிகர லாபம் ரூ.52,820 கோடியாக உயர்ந்துள்ளது (முந்தைய ஆண்டு ரூ.48,553 கோடி).

இந்த வளர்ச்சிக்கு energy, resources & utilities மற்றும் ‘நுகர்வோர் வர்த்தகம்’ போன்ற பிரிவுகள் முக்கிய பங்கு வகித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. புவியியல் அடிப்படையில், இங்கிலாந்து சந்தை அதிக வளர்ச்சியைக் கண்டது; அதனைத் தொடர்ந்து வட அமெரிக்கா உள்ளது.

நான்காம் காலாண்டின் இறுதியில் செயல்முறை லாபம் 25.3% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது 24.2% ஆக இருந்தது.

மனிதவளத் துறையில், Q4-ல் 2,356 புதிய பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,84,519 ஆக உள்ளது. இருப்பினும், இது கடந்த ஆண்டு 6,07,979 ஆக இருந்ததை விட குறைவாகும்.

TCS தலைமை ஹெச்.ஆர். அதிகாரி சுதீப் கன்னுமல் கூறுகையில்,

“AI-மையப்படுத்தப்பட்ட பண்பாட்டை உருவாக்குவது மற்றும் பணியாளர்களை AI திறன்களுடன் உருவாக்குவது FY26-ல் முக்கிய முன்னுரிமையாக இருந்தது. இது FY27-லும் தொடரும்,” என்றார்.
facebook twitter