
உங்கள் ஸ்டார்ட் அப் உண்மையான வாய்ப்பு கொண்டதா? அல்லது வெறும் காட்சி விளக்கம் தானா? என்பதை நிருபிக்க 90 நாட்கள் போதுமானது தெரியுமா?
இது ஏன் முக்கியம் எனில், இந்தியாவின் தீவிரமான நிதி சூழலில், முதலீட்டாளர்கள் எல்லா எண்ணங்களையும் ஆதரிப்பதில்லை. எனவே, முறையான 90 நாட்கள் செயல்திட்டம் நல்ல பலன் அளிக்கும். இது தேவையை உறுதி செய்யவும், வேகமான சேவையை உருவாக்கவும், கட்டுப்பாடு விதிகளை நிறைவேற்றவும், முதலீடு கோரும் முன் ஆதரவை சரி பார்க்கவும் உதவும்.
இந்த திட்டத்தை அணுகுவது எப்படி?

90 நாட்கள் ஸ்டார்ட் அப் செயல்திட்டம்
நாட்கள் 1–30: உருவாக்கும் முன் உறுதி செய்யவும்:
முதல் மாதம் நீங்கள் தீர்க்க விரும்பும் பிரச்சனை இருக்கிறது மற்றும் தீர்வு காண ஏற்றது என உணர்த்துவதற்கானது. வாய்ப்புள்ள பயனாளிகள் 20 -30 பேரிடம் பேசவும். அவர்கள் பணி செயல்முறை, பிரச்சனைகள், தற்போதைய மாற்றுகளை கேட்கவும். கவனமாக கேட்டுக்கொள்ளவும். எதையும் முன்வைக்க வேண்டாம்.
சாஸ், நிதி நுட்பம், காலநிலை மாற்ற நுட்பம் அல்லது டி2சி துறைகளில் உருவாக்குவதாக இருந்தால், இந்தியா முழுவதும் உள்ளவர்களை இலக்காக கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டும் கவனம் செலுத்தவும். எளிதான, சிக்கல் இல்லாத பரப்பை உருவாக்கவும். முதலில் இவற்றை வரையறுக்கவும்:
- மைய பிரச்சனை
- தற்போதுள்ள மாற்றுகள்
- நீங்கள் அளிக்கும் தனித்துவமான மதிப்பு
உறுப்பினர்கள் வருகை அல்லது முன்னோட்ட ஆர்வம் போன்ற ஆரம்ப ஆதரவு அறிகுறி.
அதே நேரத்தில், சட்டப்பூர்வமான செயல்முறையை நிறைவேற்றுங்கள். எம்.சி.ஏ தளத்தில் உங்கள் நிறுவனத்தை நிறுவவும். பான் மற்றும் டான் எண் பெறவும். 30 நாட்களுக்குள் இயக்குனர் குழு கூட்டம் நடத்தவும். அபாரதம் தவிர்க்க தேவையான ஆவணங்களை பராமரிக்கவும்.
நீங்கள் குறிப்பிடும் விற்றுமுதல் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாகும் என்றால் (சேவைகள்), அல்லது பொருட்கள் எனில் ரூ.40 லட்சத்திற்கு அதிகமாகும் என்றால் ஜிஎஸ்டி பதிவு செய்யவும். பூஜ்ஜியம் ரிட்டர்னும் குறித்த காலத்தில் செய்யப்பட வேண்டும். 30 வது நாளில் இலக்கு வருவாய் அல்ல. தேவையை உறுதி செய்து கொண்டு, சட்டப்பூர்வ செயல்முறையை நிறைவேற்றுவது தான் நோக்கம்.
நாட்கள் 31–60: MVP உருவாக்கவும்
இப்போது, எது தேவையோ அதை உருவாக்கவும். குறைந்த பட்ச சாத்தியம் கொண்ட பொருளை (பிராடக்ட்), நோ கோடு அல்லது எளிமையான கருவிகள் கொண்டு உருவாக்கவும். முக்கிய பிரச்சனையை தீர்க்கும் சிறிய மாதிரியை உருவாக்கவும். ஆரம்ப பயனாளிகள் 10-20 பேரிடம் சோதித்துப்பார்க்கவும். கட்டணம் செலுத்த தயாராக உள்ளனரா என அறியவும். தேவை எனில் ஒரு லேன்டிங் பேஜ் அமைக்கவும்.
சமூக ஊடக லைக் போன்றவற்றை அல்லாமல், உண்மையில் சேவைக்கு மாறுபவர்கள் விகிதத்தை கணக்கிடவும். பொருளாதார அம்சங்களையும் கவனிக்கவும். நீங்கள் ஆரம்பம் முதல் வர்த்தக நோக்கில் சிந்திக்கிறீர்கள் என்பதை முதலீட்டாளர்கள் நாடுகின்றனர்.
தகுதி பெற்றிருந்தால், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் கீழ் பதிவு செய்ய முதல் 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும். இது வரிச்சலுகை மற்றும் நிதி வாய்ப்புக்கு உதவும். 60 நாட்களில் செயல்முறை எம்.வி.பி மற்றும் ஆரம்ப பயனாளிகள் ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.
நாட்கள் 61–90: ஆதரவு அறிதல், முதலீட்டாளர் தயார் நிலை
இறுதி 30 நாட்கள் செயல் வேகத்திற்கானது. நிறுவனர் முன்னெடுக்கும் விற்பனை முக்கியம். லிங்க்டுஇன், வாட்ஸ் அப் பிசினஸ் போன்றவை மூலம் நேரடியாக சென்றடையுங்கள். 5 முதல் 10 கட்டண வாடிக்கையாளர்கள் பெறுவது நல்லது. சிறிய வருவாயும் நம்பகத்தன்மை அளிக்கும். முக்கிய காரணிகளை கவனிக்கவும்:
- துவக்க விகிதம் (ஆக்டிவேஷன்)
- மாறுபவர்கள் விகிதம்
- விலகல்
- ரொக்க பயன்பாடு
முழுவீச்சில் பணியாளர்களை நியமிக்கும் முன், நிறுவனர் ஒப்பந்தம் மற்றும் அடிப்படை பணி ஒப்பந்தங்களை முறையாக்கவும். உங்கள் மாநிலத்தில் ஏற்ற பிரிவில் பதிவு செய்யவும். தேவையில்லாத நியமனங்கள் வேண்டாம்.
கட்டுப்பாடு கொண்ட துறைகள் எனில் சட்ட விதிமுறைகளை பின்பற்றுங்கள். நிதிநுட்பம் எனில் ரிசர்வ் வங்கி அனுமதி தேவை. உணவு ஸ்டார்ட் அப் எனில் FSSAI பதிவு அவசியம். உற்பத்தி துறை எனில் மாசு தொடர்பான அனுமதி தேவை. இந்த கட்டத்தில் உங்கள் கோரிக்கையை (பிட்ச்) தயார் செய்யவும். உறுதி , ஆதரவு மற்றும் ஒராண்டு பாதையில் கவனம் செலுத்தவும். மிகை வாக்குறுதிகள் தவிர்க்கவும்.

90 நாட்கள் வெற்றி எப்படி இருக்கும்?
90 நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றியோ வருவாயோ இருக்காது. இது உறுதிக்கான நிருபனம். வாடிக்கையாளர் கருத்துக்களின் படி, தேவையை உறுதி செய்து, குறைந்தபட்ட சாத்திய சேவையை அறிமுகம் செய்து, ஆரம்ப கட்டண வாடிக்கையாளர்கள் அல்லது ஈடுபாடு காட்டும் வாடிக்கையாளர்களை பெற்றிருக்க வேண்டும்.
கட்டுப்பாடு விதிகள் தொடர்பான செயல்முறை, ஆவணங்கள் தயாராக இருக்க வேண்டும். அனுமானம் அல்லது ஆதாரங்கள் சார்ந்த தெளிவான திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். 90 நாட்கள் தீவிர கவனம் கொண்ட செயலாக்கம் உங்கள் ஐடியாவை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக மாற்றும். இந்தியாவின் போட்டி மிகு ஸ்டார்ட் அப் சூழலில் முறையான செயலாக்கம் மிகவும் முக்கியம். வெறும் லட்சியம் மட்டும் போதாது.
நிறைவாக
பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் ஆரம்ப கட்ட சோதனைகளை கடந்து முன்னேறுவதில்லை. 90 நாட்கள் திட்டம் தெளிவை அளிக்கிறது. காட்சி விளக்கத்திற்கு பதிலாக வாடிக்கையாளர்களுடன் பேச வைக்கிறது. தயாராவதற்கு முன் செயல்பட வைக்கிறது. கட்டுப்பாடு தொடர்பான சிக்கல்களை தவிர்க்கிறது. செயல் இயக்க வேகம் அளிக்கிறது.
சரியாக செயல்படுத்தினால், 90 நாட்களில் நீங்கள் ஸ்டார்ட் அப்புக்கு முயற்சிப்பதற்கு பதிலாக ஸ்டார்ட் அப்பை நடத்திக்கொண்டிருப்பீர்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியம்.
மூலம்: ஆஸ்மா கான்
Edited by Induja Raghunathan