
முன்னணி மருத்துவ நல பரிசோதனை சேவை நிறுவனம் 'தைரோகேர் டெக்னாலஜிஸ்' டாக்டர்.ரமேஷ் கின்ஹாவை முதன்மை செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஓ,ஓ) நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது.
மருத்துவ நலன் மற்றும் நோய்க்கூறி அறிதலில் பல்வேறு பிரிவுகளில் 17 ஆண்டு கால அனுபவம் கொண்ட டாக்டர்.கின்ஹா ஆய்வுகூட செயல்பாடுகள் மற்றும் தர அமைப்புகளில் ஆழமான அனுபவம் உள்ளவர்.

டாக்டர்.ரமேஷ் கின்ஹா
தைரோகேர் நிறுவனத்தில் புதிய பொறுப்பில் அவர், ஆய்வுகூட செயல்பாடுகளை மேற்பார்வை செய்வது மற்றும் தர நிர்ணய அளவை வலுவாக்குவதில் கவனம் செலுத்துவார். மேலும், நோய்கூறு அறிதல் துல்லியம் மற்றும் சேவை வழங்கலில் கவனம் செலுத்துவார்.
இதற்கு முன்னதாக, விஜயா டயக்னாஸ்டிக் செண்டர் நிறுவனத்தில் ஆய்வுக்கூட சேவைகள் குழு இயக்குனராக பதவி வகித்துள்ளார். மேலும், அப்பல்லோ ஹெல்த் அண்டு லைப்ஸ்டைல் லிட், மெட்டால் ஹெல்த்கேர், மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர், எஸ்.ஆர்டி உள்ளிட்ட மருத்துவமனைகளில் பல்வேறு பொறுப்புகளை வகுத்துள்ளார்.
"தைரோகேர்; மருத்துவ நலனை எல்லோருக்கும் உரியதாக்குவதில் முன்னோடியாக இருக்கிறது. இதன் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்று, தர அமைப்புகளை வலுவாக்குவதில் பெருமிதம் கொள்கிறேன்,” என இந்த நியமனம் குறித்து டாக்டர்.கின்ஹா கூறியுள்ளார்.
டாக்டர் கின்ஹா மருத்துவ பட்டம் மற்றும் கிருமியலில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐஎம் நாக்பூர் மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னசில் நிர்வாக மற்றும் தலைமை திட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.
"தைரோகேர் வளர்சியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அதன் தலைமையை வலுவாக்குவது அவசியம். அதிக திறன் வாய்ந்த ஆய்வுகூடங்கள் வலைப்பின்னல் அனுபவத்தோடு, செயல்முறை மற்றும் தரம் ஆகிய பிரிவுகளிலும் ஆழமான அனுபவத்தை டாக்டர்.கின்ஹா கொண்டு வருகிறார்,” என இந்த நியமனம் தொடர்பாக ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.ராகுல் குஹா கூறியுள்ளார்.
ஏபிஐ ஹோல்டிங்ஸ் அங்கமான தைரோகேர்; செலவு குறைந்த, துல்லியமான மற்றும் குறித்த நேரத்திலான நோய்கூறாய்வு சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
Edited by Induja Raghunathan