iPhone விற்பனை உந்துதலால் ஆப்பிள் வளர்ச்சி - இந்தியா குறித்து உற்சாகமடைந்த டிம் குக்!

02:03 PM May 04, 2026 | muthu kumar

Apple Inc. நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக் இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தை முன்னிறுத்தி, iPhone விற்பனை மூலம் நிறுவனத்திற்கு வலுவான இரட்டை இலக்க வளர்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். வழங்கல் சிக்கல்கள் மற்றும் AI போட்டி அதிகரித்தாலும், சேவைகள் விரிவடைந்து சாதனை வருவாய் கிடைத்துள்ளது.

இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்பு மிகப்பெரியது:

மார்ச் காலாண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான தயாரிப்பு பிரிவுகளில் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்ததாக டிம் குக் விதந்தோதியுள்ளார்.

“இந்தியா எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. நாங்கள் பல ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறோம். நன்றாக செயல்பட்டாலும், எங்கள் சந்தைப் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது — அதுவே எதிர்கால வாய்ப்பைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. முக்கிய சில்லரை விற்பனைக் கடைகள் திறப்பு, உற்பத்தி விரிவாக்கம் மற்றும் உள்ளூர்மயமாக்கல் ஆகியவை இதை உறுதிப்படுத்துகின்றன.

“பலர் நடுத்தர வர்க்கத்துக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கான சிறந்த தயாரிப்புகள் எங்களிடம் உள்ளன. பல பிரிவுகளில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புதியவர்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வலுவான காலாண்டு செயல்திறன்

Apple நிறுவனம் $111.2 பில்லியன் வருவாய் ஈட்டியது, இது கடந்த ஆண்டைவிட 17% அதிகம். இது நிறுவனத்தின் எதிர்பார்ப்பையும் விஞ்சியுள்ளது. நிகர லாபம் 19.4% உயர்ந்து $29.6 பில்லியனாக உயர்ந்தது. iPhone விற்பனை $57 பில்லியனாக 21.7% வளர்ச்சி கண்டது. iPhone 17 வகையறாக்கள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. மார்ச் மாதத்தில் Apple iPhone 17e என்ற மலிவு மாடலையும் அறிமுகப்படுத்தியது.

“iPhone 17 வரிசை எங்கள் வரலாற்றில் மிகப் பிரபலமானதாக உள்ளது,” என்று Cook கூறினார்.

ஆனால், சிப் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பற்றாக்குறை காரணமாக வழங்கல் கட்டுப்பாடுகள் இருந்ததாகவும் அவர் விளக்கினார்.

Mac, iPad மற்றும் பிற தயாரிப்புகள்

Apple MacBook Neo என்ற மலிவு லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது. இதற்கு அதிகமான தேவை இருப்பதால் வழங்கல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Mac வருவாய் 6% உயர்ந்து $8.4 பில்லியனாக இருந்தது. Freshworks நிறுவனம் இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட Mac சாதனங்களை பயன்படுத்துகிறது. iPad வருவாய் 8% உயர்ந்து $6.9 பில்லியனாக இருந்தது. Wearables மற்றும் Accessories வருவாய் 5% உயர்ந்தது.

சேவைகள் பிரிவு வேகமாக வளர்ச்சி

சேவைகள் பிரிவு ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக வளர்ந்துள்ளது. இது மொத்த வருவாயில் 25% க்கும் மேல் பங்கு வகிக்கிறது. சேவைகள் பிரிவு வருவாய் 16% உயர்ந்து $31 பில்லியனாக சாதனை படைத்தது. ஆப் ஸ்டோர் விளம்பரங்கள் மூலம் வருவாய் அதிகரித்துள்ளது. விரைவில் ஆப்பிள் மேப்ஸில் விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

AI முயற்சியில் மிதமான அணுகுமுறை

ஆப்பிள் தனது AI முயற்சியை “Apple Intelligence” என அழைக்கிறது. இது தனியுரிமையை முன்னிலைப்படுத்துகிறது.

Google உடன் இணைந்து Gemini AI மாடல்களை Siri-யில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. R&D செலவு 33% உயர்ந்து $11.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. Microsoft, Alphabet, Meta, Amazon போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் AI முதலீடு செய்கின்றன. ஆனால் Apple கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டையே மேற்கொள்கிறது.

எதிர்கால திட்டங்கள்

ஜூன் காலாண்டில் ஆப்பிள் 14% முதல் 17% வரை வருவாய் வளர்ச்சி எதிர்பார்க்கிறது. சேவைகள் பிரிவு வளர்ச்சி தொடரும் என்று டிம் குக் தெரிவித்தார். ஆப்பிள் தனது Worldwide Developers Conference 2026-ஐ ஜூன் மாதத்தில் நடத்த உள்ளது. இதில் AI, software மேம்பாடுகள் மற்றும் டெவலப்பர் கருவிகள் அறிவிக்கப்பட உள்ளன.

தலைமை மாற்றம்

ஆப்பிள் நிறுவனம் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், முக்கிய தலைமை மாற்றம் நடைபெற உள்ளது. டிம் குக் எக்ஸிகியூட்டிவ் சேர்மன் ஆக மாற, ஜான் டர்னஸ்புதிய தலைமைச் செயலதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். இது ஆப்பில் நிறுவனத்தின் ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.