மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்க உதவும் டிஜிட்டல் ஏஐ மேடையை அறிமுகம் செய்தது Trivitron Healthcare

12:24 PM Dec 10, 2025 | cyber simman

Trivitron Healthcare நிறுவனம் துபாயைச் சேர்ந்த மருத்துவ நல சேவை நிறுவனம் ரெசோஹெல்த் உடன் இணைந்து, ஏஐ திறன் கொண்ட, நோயாளிகளை மையமாகக் கொண்ட ஸ்மார்ட் மருத்துவமனை அமைப்பை நோக்கிய மாற்றத்தை வேகமாக்குவதற்கான ’டிஜிட்டல்.ஏஐ’ (Digital.AI) எனும் அடுத்த தலைமுறை டிஜிட்டல் சுகாதார நிறுவனத்தை துவக்குவதாக அறிவித்துள்ளது.  

More News :

மருத்துவ தொழில்நுட்பத்தில் Trivitron-க்கு உள்ள பாரம்பரிய வல்லமை மற்றும் டிஜிட்டல் சுகாதாரம், கிளவுட் மேடை மற்றும் கிளினிகல் ஏஐ ஆகியவற்றில் ரெசோஹெல்த் நிறுவனத்தின் ஆற்றல் ஆகியைவை இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் இந்தியாவில் கிளினிகல் தரவுகளில் உள்ள சீரற்ற தன்மை, செயல்முறை செயல்திறன் மற்றும் டிஜிட்டல் அணுகல் ஆகியவற்றில் உள்ள இடைவெளியை சீராக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

இந்த மேடை, மேம்பட்ட தகவல் அமைப்பு (LIS), இமேஜிங்கிற்கான Web-PACS, மொபைலை முதன்மையாக கொண்ட தனிநபர் சுகாதார பதிவேடு (PHR), ஏஐ திறன் கொண்ட தானியங்கிமயம், ஆகிய மேம்பட்ட கிளவுட் சார்ந்த டிஜிட்டல் சாதனங்களை ஒன்றாக கொண்டுள்ளது.

இந்த அமைப்பு, நோய்க்கூறு அறிதல், கிளினிகல், மற்றும் நிர்வாக செயல்முறைகளை ஒரே டிஜிட்டல் அமைப்பாக மாற்றுகிறது. இதன் காரணமாக, டிஜிட்டல் ஏற்பு குறைவாகவும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கு ஏற்ற அமைப்பாக இது அமைகிறது.

அடிப்படையில், ட்ரிவிட்ரான் டிஜிட்டல் ஏஐ, தானியங்கிமயம், ஏஐ சார்ந்த நோயாளி ஆதரவு, நிகழ்நேர தரவுகள் புரிதல் ஆகியவற்றை ஒன்றாக கொண்டு வந்து, மருத்துவமனை செயல்முறை, நோயாளிகள் சிகிச்சை பெறும் விதத்தை மேம்படுத்த உதவுகிறது. லிஸ் அமைப்பு, எந்த ஒரு பரிசோதனைக்கூட சாதனத்தையும் இணைத்து, தொலைதூர முடிவுகள் ஒப்புதலை சாத்தியமாக்கி, முறையான, துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.

இணையம் சார்ந்த PACS அமைப்பு எந்த பிரவுசரிலும் உருவ படங்களை அணுக வழி செய்கிறது. பிஎச்.ஆர் அனைத்து நோயாளி தரவுகளையும் ஒன்றாக்குகிறது. ஒருங்கிணைந்த ஏஐ உதவியாளர் பதிவுகள் உள்ளிட்ட தினசரி செயல்பாடுகளை கவனித்துக்கொள்கிறது.

“அடுத்த தலைமுறை மருத்துவ சேவைகள் மருத்துவமனைகள் எப்படி கிளினிகல் சிறப்பை டிஜிட்டல் திறனோடு ஒருங்கிணைக்கின்றன என்பதை பொருத்து அமையும். ட்ரிவிட்ரான் டிஜிட்டல் ஏஐ- மூலம் நாங்கள் மத்திய அளவிலான மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை கூடங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அடிப்படையை உருவாக்குகிறோம். எங்கள் நோக்கம் எளிமையானது ஆனால் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது,” என்று ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஜி.எஸ்.கே.வேலு கூறியுள்ளார்.

“ட்ர்விட்ரான் கடந்த 30 ஆண்டுகளாக அணுகல் தன்மையை புதுமையாக்கத்துடன் இணைத்து மருத்துவ நலனை வலுவாக்க உதவி வருகிறது. ட்ரிவிட்ரான் டிஜிட்டல் ஏஐ, இந்த ஈடுப்பாட்டை டிஜிட்டல் யுகத்திற்கு கொண்டு வருகிறது,” என குழுமத்தின் சி.இ.ஓ.சந்த்ரா கஞ்ஜு கூறியுள்ளார்.

”நோயாளிகள் அதிகாரம் அளித்தல் மற்றும் பயன்பாட்டு தன்மையை மையமாகக் கொண்டு நிறுவன நோக்கம் அமைந்துள்ளது,” என ரெசோஹெல்த் இணை நிறுவனர் மற்றும் ட்ரிவிட்ரான் டிஜிட்டல் ஏஐ இயக்குனர் குழு உறுப்பினர் டாக்டர்.வாஸ் மெடுபல்லே கூறியுள்ளார்.

“மருத்துவமனைகள் எளிதாக ஏற்றுக்கொண்டு, வளர்ச்சி அடையும் வகையில் டிஜிட்டல் மேடையை அளிப்பது நோக்கம் என்று ட்ரிவிட்ரான் டிஜிட்டல் ஏஐ தலைவர் மற்றும் சி.டி.ஓ.கீர்த்தி வர்மா நெதுல்பட்டி கூறியுள்ளார். டிஜிட்டல் மாற்றத்தை மெதுவாக்கும் சிக்கலான தன்மையை நிறுவனம் நீக்குவதாகவும் கூறியுள்ளார்.

ட்ரிவிட்ரான் டிஜிட்டல் ஏஐ இந்தியாவின் முக்கிய மெட்ரோக்களில் முன்மாதிரி செயல்பாடுகள் மூலம் விரிவாக்கத்தை திட்டமிட்டிருப்பதோடு, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள அடுத்த கட்ட விரிவாக்கத்தை மேற்கொள்ள உள்ளது.


Edited by Induja Raghunathan