+

இத்தாலி குழுமத்துடன் டிவிஎஸ் சப்ளை செயின் நிறுவனம் கூட்டு!

முன்னணி சர்வதேச சப்ளை சைன் தீர்வுகள் நிறுவனம் டிவிஎஸ் சப்ளை சைன் சொல்யூஷன் ( டிவிஎஸ் எஸ்சிஎஸ்), இத்தாலியின் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத்துறை சப்ளை சைன் நிறுவனம் ஏஎல்.ஏ குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

முன்னணி சர்வதேச சப்ளை செயின் தீர்வுகள் நிறுவனம் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன் (டிவிஎஸ் எஸ்சிஎஸ்), இத்தாலியின் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத்துறை சப்ளை செயின் நிறுவனம் ஏஎல்.ஏ குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத்துறை சந்தையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்துக்கொள்வதற்கான கூட்டாக இது அமைகிறது.

இந்தியாவின் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத்துறை சந்தை 28 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது.  

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த சந்தையின் குறிப்பாக, பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கான சப்ளை செயின் வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் அமைகிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் கவனம் செலுத்தி பின்னர் மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இரண்டு நிறுவனங்களும் கூட்டாக ஒருங்கிணைந்த சப்ளை செயின் தீர்வுகளை, ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைக்கு பிந்தைய சுழற்சி ஆகியவற்றில் வழங்கும்.

TVS SCS நிறுவனம் தனது யூகே செயல்பாடுகள் மூலம் பெற்ற நீண்ட கால பாதுகாப்புத்துறை சார்ந்த சப்ளை செயின் அனுபவம் மற்றும் உள்ளூர் இருப்பு ஆகியவற்றின் சாதகங்களை அளிக்கும். மேலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏரோஸ்பேஸ் துறையில் உள்ள தனது அனுபவம், தொடர்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும்.

”ஏ.எல்.ஏ குழுமத்திடனான இந்த கூட்டு, சர்வதேச அளவில் சிக்கலான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட துறைகளில்  பொருத்தமான திறனை உருவாக்கும் எங்கள் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. டிவிஎஸ் எஸ்விஎஸ் நிறுவன வீச்சு, டிஜிட்டல் மேடைகள் மற்றும் வலுவான இந்திய இருப்பு ஆகியவை ஏஎல்.ஏ குழுமத்தின் துறை சார்ந்த அனுபவத்துடன் இணையும் போது நல்ல பலன் அளிக்கும்,” என்று டிவிஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் செயல் இயக்குனர் ஆர்.தினேஷ் கூறியுள்ளார்.

”இந்தியா ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத்துறை, இந்தியமயமாக்கம் மற்றும் சர்வதேச சப்ளை செயின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் முக்கிய புள்ளியில் இருக்கிறது. இந்த கூட்டு, இத்துறையில் எங்கள் அனுபவம் மற்றும் ஏ.எல்.ஏ குழும அனுபவம் இணைந்து இந்திய ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு திட்டங்களுக்கான நம்பகமான சப்ளை செயின் மேடையை உருவாக்க  வழி செய்கிறது,” என நிர்வாக இயக்குனர் ரவி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

“துவக்கம் முதல் ஏ.ஐ.ஏ தொழில்நுட்ப பலம், நீண்ட கால உறவுகளில் கவனம் செலுத்துக்கிறது. இந்த தொலைநோக்கை இந்த கூட்டு பிரதிபலிக்கிறது,” என ஏ.எல்.ஏ குழும சி.இ.ஓ.விட்டோரியோ ஜென்னா கூறியுள்ளார்.

“டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் இந்த பிரிவில் நம்பகமான நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்துடனான கூடு, இந்தியாவில் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த சப்ளை செயின் தீர்வுகளை இணைந்து உருவாக்க வழி செய்கிறது,” என ALA MENA சி.இ.ஓ.மவுரோ ரோமனோ கூறியுள்ளார்.


Edited by Induja Raghunathan

facebook twitter