+

Grok AI ஆபாச உள்ளடக்கங்கள்: இந்திய அமைச்சக எச்சரிக்கைக்குப் பின் தவறை ஒப்புக்கொண்ட X

க்ரோக் (Grok) AI மூலம் ஆபாச உள்ளடக்கம் வெளியாவதன் விவகாரத்தில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தலைமையிலான மைக்ரோபிளாகிங் தளம் X தனது தவறை ஒப்புக்கொண்டு, இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்குவதாக உறுதி அளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வ

க்ரோக் (Grok) AI மூலம் ஆபாச உள்ளடக்கம் வெளியாவதன் விவகாரத்தில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தலைமையிலான மைக்ரோபிளாகிங் தளம் X தனது தவறை ஒப்புக்கொண்டு, இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்குவதாக உறுதி அளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் இதுவரை சுமார் 3,500 பதிவுகள் தடைசெய்யப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன. ‘க்ரோக் இமேஜின் (Grok Imagine)’ எனப்படும் வேகமான பட உருவாக்க கருவி, உண்மையான நபர்களின் ஆபாச நிர்வாண படங்களை உருவாக்கி வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததே இந்த சர்ச்சைக்கு காரணமாகும்.

இதனைத் தொடர்ந்து, 2026 ஜனவரியில், பணம் செலுத்தாத பயனர்களுக்கு க்ரோக்கின் பட உருவாக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான வசதிகளை X கட்டுப்படுத்தியது. இந்த அம்சங்கள் பெரும்பாலும் கட்டண சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் வகையில் மாற்றப்பட்டன.

அரசு வட்டாரங்கள் கூறுகையில்,

X தனது தவறை ஏற்றுக்கொண்டு, இனிமேல் தளத்தில் ஆபாசப் படங்கள் அனுமதிக்கப்படாது என்றும், இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளது.
Elon Musk's Grok 3: The Next Generation of AI?

இந்தியாவை தவிர, பிற நாடுகளிலும் X மீது ஒழுங்குமுறை அழுத்தம் அதிகரித்துள்ளது. 2026 ஜனவரியில், ஐரோப்பிய கமிஷன், டிஜிட்டல் சர்வீசஸ் ஆக்ட் கீழ் க்ரோக் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க X-க்கு உத்தரவிட்டது. அதேபோல், பிரிட்டனில் ஆன்லைன் சேஃப்டி ஆக்ட் மூலம் சமூக ஊடக தளங்களை பொறுப்புக்குள் கொண்டுவர அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்தியாவில், க்ரோக் AI தொடர்பான ஆபாச உள்ளடக்கம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படும் முறைகள் குறித்து விவரங்கள் அளிக்குமாறு அரசு X-யிடம் கேட்டிருந்தது.

2026 ஜனவரி 2-ஆம் தேதி, X-ன் இந்திய அலுவலருக்கு ஐடி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி, 72 மணி நேரத்தில் திருத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

முதற்கட்ட பதில் போதுமானதாக இல்லை எனக் கருதப்பட்டதால், விரிவான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க X-க்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பதிலிலும், நீக்கப்பட்ட உள்ளடக்கங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் மற்றும் எதிர்கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெறவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசின் கடும் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக, 2025-ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றம், ‘சஹ்யோக்’ போர்டல் தொடர்பாக X தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அவசர அமலாக்கத்திற்கு நிர்வாக வழிமுறைகளை பயன்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இருப்பதை உறுதி செய்தது.

X-ன் ‘Safety’ ஹேண்டில் வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSAM) உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தேவையான போது உள்ளூர் அரசுகள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தது.

“க்ரோக் மூலம் சட்டவிரோத உள்ளடக்கம் உருவாக்கும் அல்லது அதற்கு உந்தும் பயனர்கள், நேரடியாக அந்த உள்ளடக்கத்தை பதிவேற்றினால் எடுக்கப்படும் அதே நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்,” என X கூறியது.

இதற்கு முன், எலான் மஸ்க், AI கருவிகள் தன்னிச்சையாக நடுநிலையானவை என்றும், அவற்றை தவறாக பயன்படுத்தி சட்டவிரோத உள்ளடக்கம் உருவாக்குபவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

facebook twitter