
முன்னணி குவிக் காமர்ஸ் நிறுவனம் Zepto, ரூ.11,000 கோடி பொது பங்கு வெளியீட்டிற்கான விண்ணப்பத்தை செபியிடம் ரகசியமாக சமர்பித்துள்ளதாக, இது பற்றி அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் முன்வைக்காமல், வரைவு ஆவணத்தை பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்து, கருத்து கோரும் தாக்கலுக்கு முந்தய ரகசிய வழியை ஜெப்டோ தேர்வு செய்துள்ளது.
பொதுவெளியிலான தாக்கலுக்கு முன்பாக, ஐபிஓ தயார்நிலையில் ஏற்ற தன்மையை பெற மற்றும் சந்தை நிலைக்கு ஏற்ப நிறுவனங்கள் இந்த வழியை அதிகம் பின்பற்றத் துவங்கியுள்ளன.
இந்த செயல்முறை நிறைவடைந்தால், ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள போட்டி நிறுவனங்கள் ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி வரிசையில் ஜெப்டோவும் இணையும்.

ஜொமேட்டோவின் தாய் நிறுவனம் எடர்னல் மற்றும் அதன் குவிக் காமர்ஸ் நிறுவனம் பிளிங்கிட் 2021ல் பட்டியலிடப்பட்ட நிலையில், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் 2024 நவம்பரில் பட்டியலிடப்பட்டது.
ஜெப்டோ, அமெரிக்க பென்ஷன் நிதி கலிபோர்னியா பப்ளிக் எம்பிளாயிஸ் ரிடையர்மண்ட் சிஸ்டம் தலைமையிலான முதன்மை மற்றும் இரண்டாம் சுற்று கொண்ட கொண்ட சுற்றில் 450 மில்லியன் டாலர் நிதி திரட்டிய சில மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சுற்று நிறுவனத்தை 7 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு கொண்டதாக கருத்து மேற்கொள்ளப்பட்டது. குவிக் காமர்ஸ் பரப்பில் சந்தை பங்கை காக்க மற்றும் விரிவாக்க தேவயான வளத்தை நிறுவனத்திற்கு இந்த சுற்று அளிக்கிறது.
“செயல்பாடுகளை வலுவாக்குவதோடு, வர்த்தகத்தை வேகமாக வளர்த்தெடுக்கும் உத்தியின் வெளிப்பாடாக இந்த நிதி அமைகிறது,“ என தலைமை அதிகாரி ஆதித் பலிகா தெரிவித்திருந்தார். நிறுவனம் 900 மில்லியன் டாலர் நிகர ரொக்கம் கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
2025 செப்டம்பர் கணக்குபடி நிறுவனம் 900க்கு மேலான டார்க் ஸ்டோர்கள் கொண்டுள்ளது. ரூ.1,000- ரூ.1,100 கோடிக்கு மேல் செலவு செய்து, 3 பில்லியன் டாலர் நிகர விற்பனை கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி குழு, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan