+

ஏஐ டெவலப்பர்களுக்கு Zoho ராஜேந்திரன் தண்டபாணி முன்வைத்த 8 முக்கிய பாடங்கள்!

டெவ்ஸ்பார்க்ஸ் சென்னை 2025 நிகழ்ச்சியில் ஜோஹோ தொழில்நுட்ப இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி மென்பொருள் டெவலப்பர்கள் உயர்ந்த தரத்தை இலக்கை கொள்ள வேண்டும் என்றும், ஏஐ ஏற்பு வேகமாக நிகழும் காலத்தில் தாங்கள் கொண்டிருக்கும் அளப்பறிய ஆற்றலை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“உங்கள் முன் நான் முன்வைக்கும் முதல் பாடம், இளைப்பாருங்கள்...” என்பது தான், என்கிறார் ஜோஹோ தொழில்நுட்ப இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி.

ஏஐ நுட்பத்தை ஏற்பது வேகமாக இருக்கும் மற்றும் கல்வி மற்றும் ஏஐ திறன் இதை இன்னும் எட்டிப்பிடிக்காத நிலையில், மென்பொருள் டெவலப்பர்கள் சற்று நிதானம் கொண்டு, கோடிங்கை கடந்து பார்க்க வேண்டும், என்கிறார்.

ZOHO Director

Devsparks; சென்னை 2025 நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியவர், ஏஐ முதன்மையாக விளங்கும் எதிர்காலத்தை அணுக மென்பொருள் டெவலப்பர்கள் பின்பற்ற வேண்டிய எட்டு முக்கிய பாடங்கள் என தான் கருதுவதை பகிர்ந்து கொண்டார்.

"இப்போது யோசித்துப்பார்க்கும் போது, இந்த உலகை இயக்கும் தொழில்நுட்பத்தை நமக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. மனித குலம் காலப்போக்கில் கற்றுக்கொண்டது. ஏஐ திறன் பெறுவதிலும் இதை பின்பற்ற முடியும்,” என்று அவர் தனது முதல் பாடமாக குறிப்பிட்டார்.

இருப்பினும், சில பணிகளை மெதுவாகவும், பொறுமையாகவும் அணுக வேண்டும்.

“ஒரு சில வேலைகள் நேரம் எடுத்துக்கொள்ளும், நீங்கள் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். நீங்கள் மெதுவாக செயல்பட வேண்டும். தயவு செய்து இதை வேகமாகவோ, அவசரமாகவோ செய்ய வேண்டாம்,” என்று இரண்டாவது பாடமாக குறிப்பிட்டார்.

டெவலப்பர்கள் கனவு காண வேண்டும் என்பது அவரது மூன்றாவது பாடமாக அமைகிறது. ஏஐ சூழலில் இல்லாததை உருவாக்கித்தரும் போக்கை சுட்டிக்காட்டியவர், படைப்பூக்கம் என்பது புதுமையான, மூல எண்ணங்களை உருவாக்குவது, என்றார்.

உயர்ந்த நோக்கத்திற்காக கோடிங் செய்ய வேண்டும் என்பதை நான்காவது பாடமாக குறிப்பிட்டார். மென்பொருளாளர்கள் மிகப்பெரிய பொறுப்பை உணர வேண்டும் என்றும் பொது நலன், வாடிக்கையாளர் நலனைவிட பெரிது, என்றும் கூறினார்.

மேலும், காட்சி நோக்கில் ஈர்க்கும் முன்னோட்ட வடிவம் சில நேரங்களில் அதை மேம்படுத்த தடையாக இருக்கும், என்றார். ஆகவே இலக்கு என்பது அழகுயல் மட்டும் அல்லாமல் செயல் தன்மையாக இருக்க வேண்டும்.

ராஜா ரவிவர்மாவின் மோகினி மற்றும் பஸ்மாசுரன் ஓவியத்தை குறிப்பிட்டவர் மென்பொருள் இப்போது எப்படி மென்பொருள் டெவலப்பர்களை தானியங்கிமயமாக்குகிறது என்று விவரித்தார். யார் தலை மீது கை வைத்தாலும் சாம்பலாகிவிடும் வரத்தை பஸ்மாசுரன் சிவனிடம் இருந்து பெற்றதை புராண கதை விவரிக்கிறது.

மேலும், ஏஐ முதன்மை எதிர்காலத்திற்கு தயாராக தேவையான முதன்மை திறன் ஒத்திசைவோடு, சீராக, அர்த்தம் உள்ள வகையில் தகவல் தொடர்பு கொள்ளும் திறனாகும். இந்த திறனோடு நல்ல கேள்விகள் கேட்கும் திறன் ஏழாவது பாடமாகும்.

இன்றைய ஏஐ யுகத்தில் ஒரு மென்பொருளாளரின் உண்மையான மதிப்பு, தொழில்நுட்ப ஆற்றல் என்பதைவிட அரத்தமுள்ள, படைப்புக்கம் மிக்க முக்கியமாக அறம் சார்ந்த முறையில் செயல்படும் தன்மை என்பதை இந்த உரை முன்னிறுத்தியது.

யுவர்ஸ்டோரி குழு


Edited by Induja Raghunathan

facebook twitter