
இந்திய ஜிடிபிக்கு இரண்டாவது பெரிய பங்களிப்பாளர் மற்றும் இந்தியாவில் வேகமாக வளரும் ஸ்டார்ட் அப் சூழல்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாடு, 2032 வாக்கில் 20 முன்னணி உலகளாவிய ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக திகழும் தொலைநோக்குடன், புதுமையாக்கத்தை ஊக்குவித்து, முதலீடுகளை ஈர்த்து, நீடித்த நிலையான வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தொலைநோக்கு பார்வையை நிதர்சனம் ஆக்கும் வகையில் Startup TN சார்பில் ’தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’ நடைபெறுகிறது.
எதிர்வரும் அக்டோபர் 9-10, 2025ல், ’எழுச்சிக்கான மாற்றம்” ('Disrupt to Rise') எனும் கருப்பொருளின் கீழ், கோவையில், கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் (CODISSIA Trade Fair Complex) நடைபெற உள்ள TNGSS 2025, ’ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், சர்வதேச சிந்தனையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட 30,000 க்கும் மேலான பங்கேற்பாளர்களை ஒன்றாகக் கொண்டு வரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மேடையாக அமையும் நம்பிக்கையை கொண்டுள்ளது.

எதிர்காலத்தை வரையறுக்கும் மாநாடு
இந்த இரண்டு நாள் மாநாட்டில் 35க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த 750+ அரங்குகள், 200+ சர்வதேச பங்கேற்பாளர்கள், 120 + தேசிய பேச்சாளர்கள் மற்றும் 100+ முதலீட்டாளர்களை ஈர்த்து, வலைப்பின்னல் தொடர்பு, கூட்டு முயற்சி, வர்த்தக வளர்ச்சிக்கான நிகரில்லாத வாய்ப்புகளை உருவாக்க உள்ளது. 10+ யூனிகார்ன்கள், 75+ இன்குபேட்டர்கள் பங்கேற்க உள்ள டி.என்.ஜி.எஸ்.எஸ் 2025-இல் ஆழ்நுட்பம், காலநிலை நுட்பம், விண்வெளி நுட்பம், வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட துறைகளில் தனிகவனம் செலுத்த உள்ளது.
நீடித்த நிலையான வர்த்தக மாதிரிகளை உருவாக்கும் அதே நேரத்தில் சமூக சவால்களை எதிர்கொள்ள ரோபோடிக்ஸ் நுட்ப பயன்பாட்டை ஆய்வு செய்யும் வகையிலான ’சேவை ரோபோக்கள் மூலம் சமூக தாக்கம் உருவாக்கம்’ அமர்வு உள்ளிட்ட முக்கிய உரையாடல்கள் நாளைய புதுமையாக்கத்தை வடிவமைக்கும் வகையில் அமைய உள்ளன. டிஜிட்டல் யுகத்திற்கான முக்கிய பாதுகாப்பு வரைவு திட்டங்களை ஆய்வு செய்யும் ’சைபர் பாதுகாப்பு உறுதியை உருவாக்குவது’, மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, வேளாண் நுட்பங்கள் எப்படி காலநில மாற்றத்தை எதிர்கொள்ள உதவும் என வழிகாட்டும் “காலநிலை உறுதிக்கான வேளாண் ரோபோக்கள்’ ஆகிய ஆழமான உரையாடல்களிலும் மாநாடு ஈடுபடும்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக புத்தொழில் மாநாட்டை துவக்கி வைத்து, இந்தியா மற்றும் புதுமையாக்க எதிர்காலத்தை வரையறுக்கும் உத்திசார்ந்த உரையாடல்களுக்கான மேடையை அமைத்துக் கொடுக்கவுள்ளார்.
தமிழ்நாட் ஏன் ஸ்டார்ட் அப்களை ஈர்க்கும் இடமாக அமைகிறது?
தமிழ்நாட்டின் பொருளாதார ஆற்றலே இதற்கு பதிலாக அமைகிறது. தேசிய மக்கள்தொகையில் 6 சதவீதம் கொண்டு, இந்தியாவின் ஜிடிபியில் ~10% பங்கு மற்றும் அதன் உற்பத்தி ஜிடிபியில் 12% பங்களிப்பு செலுத்தும் தமிழ்நாடு; வளர்ச்சி, செயல்திறன், அனைவருக்குமான தன்மை- (இந்திய ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 41% தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகியவற்றை இணைக்கிறது.
பல துறைகளில் மாநிலம் முன்னிலை வகிக்கிறது: ஆட்டோமொபைல்- (ஹூண்டாய், அசோக் லேலண்ட், டிவிஎஸ்), மின்னணு (ஃபாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் வழிநடத்த இந்திய மின்னணு ஏற்றுமதியில் 40%), இந்தியாவின் ஐபோன்களில் 80 சதவீதம் அசம்பிள் செய்வதன் மூலம் நாட்டின் ஐபோன் தலைநகராக விளங்குகிறது. ஜோஹோ, ஃபிரெஷ்வொர்க்ஸ் போன்ற சர்வதேச வெற்றிக்கதைகளோடு சென்னை செழிக்கும் சாஸ் மற்றும் ஐடி மையமாக விளங்குகிறது.
12,000க்கும் அதிகமான DPIIT பதிவு ஸ்டார்ட் அப்’களோடு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் சூழல் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இது ஆறு மடங்கு வளர்ச்சியாகும். இவற்றில் பாதி ஸ்டார்ட் அப்’கள் பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவில் மாநிலத்தின் ஈடுபாட்டிற்கு அடையாளமாக இது அமைகிறது. ஆண்டுக்கு ஐந்த லட்சம் பட்டதாரிகள் (2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள்), இந்தியாவில் அதிக இன்குபேட்டர்களோடு, தமிழ்நாடு நிகரில்லாத திறமை மற்றும் முறையான ஆதரவு கொண்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவினருக்குமான வாய்ப்புகள்
ஸ்டார்ட் அப்’கள்: TNGSS 2025; நிதி, வளர்ச்சி, சர்வதேச தொடர்புகளுக்கான மேடையாக அமையும். 500க்கும் மேலான முதலீட்டாளர்கள் முன்னெடுப்புகள், விரைவு கூட்டங்கள் மூலம் ஸ்டார்ட் அப்’கள் வர்த்தக மற்றும் உலக வாடிக்கையாளர்கள் தொடர்புகளை பெறும் வாய்ப்புடன் நிதி வாய்ப்புகளையும் பெறலாம்.
முதலீட்டாளர்கள்: வாய்ப்புகள் லட்சியத்துடன் இணையும், ஆசியாவின் மிகவும் துடிப்பான ஸ்டார்ட் அப் சூழல்களில் ஒன்றான பகுதியில் அதிக வாய்ப்பு கொண்ட அடுத்த அலை நிறுவனங்களுக்கான நுழைவு வாயிலாக உங்களுக்கு அமைகிறது.
பார்வையாளர்கள்: ஸ்டார்ட் அப் அடிப்படைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும் அல்லது புத்தாக்க நிறுவனம் துவக்க விரும்பும் எண்ணத்தை கொண்டிருந்தாலும், கூகுள், மெட்டார், ஹார்வர்டு இன்னவேஷன் லேப்ஸ் உள்ளிட்ட சர்வதேச முன்னணி சிந்தனை வழிகாட்டிகளுடனான 10க்கும் மேற்பட்ட மாஸ்டர் கிளாஸ், தொழில்முனைவு உலகிற்கான முதல் படியாக (டி.என்.ஜி.எஸ்.எஸ் 2025) அமைகிறது.
வர்த்தக நிறுவனங்கள்: திறந்த வெளி புதுமையாக்க சவால்கள், பங்குதாரர் வாய்ப்பு ஆகியவை கொண்ட பிரத்யேக கார்ப்பரேட் சிறப்பு அறங்குகள் மூலம் இந்தியாவின் வேகமாக வளரும் ஸ்டார்ட் அப் சூழலில் உங்களுக்கான முன்வரிசை இடம்.
சூழல் பங்குதாரர்கள்: ஒன்றிணைந்து எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பிரத்யேக அமர்வுகள் மூலம் ஸ்டார்ட் அப் சூழலை வளர்க்கும் இன்குபேட்டர்கள், ஆக்சலேட்டர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் அமைப்புகளை இந்த மாநாடு வலுவாக்கும்.
உங்கள் விரல் நுனியில் புதுமையாக்கம்
ஏஐ திறன் கொண்ட டி.என்.ஜி.எஸ்.எஸ் செயலி, பார்வையாளர்கள் நிகழ்ச்சி தகவல்கள், அட்டவனைகளை அணுகி, தனிப்பட்ட பரிந்துரைகளை பெற வழி செய்து, வலைப்பின்னலாக்கத்தை புரட்சிகரமாக்கும். மத்திய மற்றும் மாநில திட்டங்கள் தொடர்பான பிரத்யேக அரங்கு மற்றும் வேகமாக வளரும் விண்வெளி நுட்ப ஸ்டார்ட் அப் துறைக்கான பிரத்யேக அரங்கு உள்ளிட்ட சிறப்பு அரங்குகள் உள்ளன.
இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 பங்குதாரர் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், (டி.என்.ஜி.எஸ்.எஸ் 2025) ஒரு காண்காட்சி என்பதற்கும் மேலாக, 2030ல் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் எனும் லட்சிய இலக்கை நோக்கி நகரும் இயக்கமாக அமைகிறது.
ஸ்டார்ட் அப் இந்தியாவின் மாநில பட்டியலில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக மற்றும் ஸ்டார்ட் அப் ஜினோமின் ஆசிய பிராந்திய பட்டியலில் 18வது இடத்தில் உள்ள தமிழ்நாடு, உலகின் லட்சியம் மிக்க தொழில்முனைவோர்கள் மற்றும் தொலைநோக்கு முதலீட்டாளர்களை அக்டோபரில் கோவையில் வரவேற்க தயாராக உள்ளது.
Edited by Induja Raghunathan