+

அமெரிக்க ஷூ ப்ராண்ட் New Balance தமிழ்நாட்டில் தயாரிப்பு - பாஸ்டன் செல்லும் முதல் ஏற்றுமதி சரக்கு!

உலக புகழ்பெற்ற அமெரிக்க ஷூ தயாரிப்பு நிறுவனமான New Balance Athletics, Inc. தனது இந்தியா நடவடிக்கைகளில் மிக முக்கியமான முன்னெடுப்பாக தமிழ்நாட்டிலிருந்து தனது முதலாவது உலகளாவிய காலணி ஏற்றுமதியை அனுப்பியுள்ளது. இதனை தமிழ்நாடு அரசுஅறிவித்தது. இந்தப் பெருமையை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள முதலீட்டுத

உலக புகழ்பெற்ற அமெரிக்க ஷூ தயாரிப்பு நிறுவனமான New Balance Athletics, Inc. தனது இந்தியா நடவடிக்கைகளில் மிக முக்கியமான முன்னெடுப்பாக தமிழ்நாட்டிலிருந்து தனது முதலாவது உலகளாவிய காலணி ஏற்றுமதியை அனுப்பியுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்தப் பெருமையை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள முதலீட்டுத் துறையின் வழிகாட்டும் நிறுவனம் Guidance,

"அமெரிக்க பாஸ்டன் நகரின் புகழ்பெற்ற ஷூ பிராண்ட் New Balance, இப்போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது, உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது!" என குறிப்பிட்டது.

இந்த ஏற்றுமதி, சென்னை தலைமையகமுடைய Farida Group மற்றும் தைவானில் உள்ள CJ Group ஆகியவற்றின் கூட்டாண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர்–அம்பூர் பகுதியில் புதிய Greenfield தொழிற்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

New balance factory

Representational image

Guidance நிறுவனம் இது தொடர்பாக மேலும் கூறும்போது,

"இந்த ஏற்றுமதி, தமிழக காலணி தொழில்துறையில் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளதைக் குறிக்கிறது. இது விளையாட்டு மற்றும் செயற்கை காலணி உற்பத்தியில் மிகப்பெரிய முன்னேற்றமாகும்."

New Balance – Now Made in Tamil Nadu, Exported to the World

Boston’s iconic footwear brand @newbalance has launched its first-ever exports from India – Made in #TamilNadu through the Farida Group and #Taiwan based CJ Group partnership.

With massive plans in progress for a… pic.twitter.com/lWVssu9fmI

— Guidance Tamil Nadu (@Guidance_TN) August 25, 2025 ">

New Balance, தற்போது குடும்ப வணிகத்தின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனம் ஆகும், இதனை நிறுவனத் தலைவர் மற்றும் சிஇஒ ஜோ பிரஸ்டன் வழிநடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய இந்த நிறுவனம், உலகம் முழுவதும் 7,500க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது. மேலும், 400 நிறுவனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் 3,400 பங்குதாரர் இயக்கும் கடைகள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

“Make in Tamil Nadu – Exported to the World” என்பதை வலியுறுத்தும் இந்த நிகழ்வு, தமிழகத்தின் உலகத் தரத்திலான உற்பத்தித்திறனை உறுதி செய்கிறது என்ற பெருமையுடன் கூறுகிறது தமிழக அரசு.

facebook twitter