+

இண்டெல் ஆதரவு யூனிட்டுடன் 3 மாநிலங்களில் நான்கு சிப் தயாரிப்பு ஆலைகள்- மத்திய அரசு அனுமதி!

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆதரவுடன் இயங்கும் ஒரு அலகு உட்பட நான்கு செமிகண்டக்டர் ஆலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தம் ரூ.4,594 கோடி முதலீட்டை உடைய திட்டமிது என்று தகவல் மற

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆதரவுடன் இயங்கும் ஒரு அலகு உட்பட நான்கு செமிகண்டக்டர் ஆலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தம் ரூ.4,594 கோடி முதலீட்டை உடைய திட்டமிது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாயன்று தெரிவித்தார்.

கட்டுமானத்தில் உள்ள ஒரு திட்டத்திலிருந்து முதல் மேட் இன் இந்தியா சிப் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், மின்னணு தயாரிப்புகளில் புதிய திட்டங்கள் உள்நாட்டுப் பங்களிப்பை தற்போதுள்ள 20% இலிருந்து 30% ஆக அதிகரிக்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது,

"ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்படும் நான்கு செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலைகள் அனைத்தும் 2-3 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது," என்றார்.

இது தனிநபர் கணினி சிப் தயாரிப்பாளரான இன்டெல் கார்ப்பரேஷனை மற்ற தொழில்நுட்ப கூட்டாளர்களுடன் இணைத்து மேற்கொள்ளப்படும் முதல் செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டமாகும்.

கண்ணாடி அடித்தளத்தைப் பயன்படுத்தி 3D கண்ணாடியில் சிப் பேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை. ஒவ்வொரு ஆண்டும் செமி கண்டக்டரின் சைஸ் குறைந்து வருவதால், ஒரு சிறிய இடத்தில் அதிக சில்லுகளை பேக் செய்வதற்கான மேம்பட்ட தொழில்நுட்பமே இந்த 3D கண்ணாடி பேக்கேஜிங் .

மிகச்சிறிய சிப் அளவு 2 நானோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் சிப்களின் அளவு மேலும் குறைவதால் அவற்றைக் கையாள தொழில்நுட்ப முன்னேற்றம் தேவைப்படுகிறது.

Semi-conductor chip

புவனேஸ்வரில் SiCsem பிரைவேட் லிமிடெட் ரூ.2,066 கோடி முதலீட்டில் ஒரு சிலிக்கான் கார்பைடு செமிகண்டக்டர் ஆலையை அமைக்கிறது. சிலிக்கான் கார்பைடு மிகவும் உறுதியான பொருளாதலால் அதிக வெப்பநிலையைத் தாங்கும். மேலும் சிலிகான் கார்பைடு நமது ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு டவர்கள், ராக்கெட்டுகள், ரயில் என்ஜின்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆலை ஆண்டுக்கு 9.6 கோடி சிப்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் ஆதரவு அளிக்கும். மின்னணு பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான CDIL-ன் செமிகண்டக்டர் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த வசதி பஞ்சாபில் ரூ.117 கோடி முதலீட்டில் அமைக்கப்படும், ஆண்டுக்கு 15.8 கோடி யூனிட் உற்பத்தி திறன் கொண்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த 11 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தித் துறை ஆறு மடங்கு வளர்ந்து ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மின்னணு ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்து ரூ.3.3 லட்சம் கோடியாகவும், மொபைல் உற்பத்தி 28 மடங்கு அதிகரித்து ரூ.5.5 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2 முதல் 4 வரை சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நான்கு நாடுகளுடன் இணைந்து இந்தியா செமிகான் இந்தியா 2025-ஐ நடத்துகிறது.

"செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்காக 85,000 உயர் திறன் கொண்ட திறமையாளர்களை உருவாக்க நாங்கள் இலக்கு வைத்திருக்கிறோம். ஏற்கனவே 60,000 பயிற்சி பெற்ற திறமையாளர்களைத் தாண்டிவிட்டோம். 2032 ஆம் ஆண்டுக்குள் உலகில் செமிகண்டக்டர்களுக்கு 10 லட்சம் திறமையாளர்கள் பற்றாக்குறை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முழு செமிகண்டக்டர் துறையிலும் இந்திய மனிதவளம் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நான் காண்கிறேன்."

ஐஐடி புவனேஸ்வர் ரூ.45 கோடி முதலீட்டில் சிலிக்கான் கார்பைடு செமிகண்டக்டர்களுக்கான ஆராய்ச்சி பிரிவைத் தொடங்கியுள்ளது. கார்பைடு பொடியிலிருந்து நீராவி தயாரிக்கும் முதல் வெற்றிகரமான பரிசோதனையை ஐஐடி புவனேஸ்வர் முடித்துள்ளது, அதில் இருந்து செமிகண்டக்டர் வேஃபர் தயாரிக்க தேவையான இங்காட் தயாரிக்கப்படுகிறது.

SiCsem பிரைவேட் லிமிடெட், ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள இன்ஃபோ பள்ளத்தாக்கில், UK-வை தளமாகக் கொண்ட Class-SiC வேஃபர் ஃபேப் லிமிடெட் உடன் இணைந்து ஒருங்கிணைந்த சிலிக்கான் கார்பைடு (SiC) அடிப்படையிலான கலவை குறைக்கடத்திகள் ஆலையை அமைக்கிறது. இது நாட்டின் முதல் வணிக கலவை உற்பத்தி அலகு ஆகும்.

தென் கொரியாவின் APACT நிறுவனத்துடன் தொழில்நுட்ப கூட்டாண்மையுடன், அட்வான்ஸ்டு சிஸ்டம் இன் பேக்கேஜ் டெக்னாலஜிஸ் (ASIP) ஆந்திரப் பிரதேசத்தில் ஆண்டுக்கு 96 மில்லியன் யூனிட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு குறைக்கடத்தி உற்பத்தி அலகை அமைக்கும். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் மொபைல் போன்கள், செட்-டாப் பாக்ஸ்கள், ஆட்டோமொபைல் பயன்பாடுகள் மற்றும் பிற மின்னணு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும்.

புதிய செமிகண்டக்டர் திட்டங்கள் இந்தியாவில் உள்ள மொத்த சிப் ஆலைகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்துகின்றன, மொத்த முதலீட்டுத் திட்டம் சுமார் ரூ.1.6 லட்சம் கோடி ஆகும்.

தகவல் உதவி: பிடிஐ

facebook twitter