+

பெண்கள் மட்டுமே அடங்கிய கமாண்டோ பிரிவை தொடங்கிய CISF

வரலாற்றில் முதன்முறையாக, பெண்கள் மட்டுமே கொண்ட சிறப்பு கமாண்டோப் படையை உருவாக்கியது சி.எஸ்.ஐ.எஃப் என்னும் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை. இந்த புரட்சிகரமான நடவடிக்கையில், மத்திய தொழிற் பாதுகாப்பு படை தனது முதல் முழுப் பெண்கள் கமாண்டோ பிரிவுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கத் தொடங்கியுள

வரலாற்றில் முதன்முறையாக, பெண்கள் மட்டுமே கொண்ட சிறப்பு கமாண்டோ படையை உருவாக்கியது சி.எஸ்.ஐ.எஃப் என்னும் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை. இந்த புரட்சிகரமான நடவடிக்கையில், மத்திய தொழிற் பாதுகாப்பு படை தனது முதல் முழுப் பெண்கள் கமாண்டோ பிரிவுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி மத்தியப்பிரதேசத்தின் பர்வாஹாவில் தொடங்கியது. விமானப் பாதுகாப்புக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்களைக் கொண்ட முதல் குழு, அக்டோபர் 4 ஆம் தேதி பயிற்சியை முடிப்பார்கள், அதைத் தொடர்ந்து இரண்டாவது குழு அக்டோபர் 6 முதல் நவம்பர் 29 வரை பயிற்சி பெறும். இந்த ஆரம்ப கட்டத்தின் முடிவில், குறைந்தது 100 பெண் கமாண்டோ படை பயிற்சியை முடித்திருப்பார்கள்.

இந்தக் கடும் பயிற்சியில், உடற்கட்டு மற்றும் ஆயுத பயிற்சி, நேரடி துப்பாக்கிச்சூடு பயிற்சி, தடுப்பு நடவடிக்கைகள் பயிற்சி, கயிறு ஏறுதல், வனத்தில் தற்காப்பு, 48 மணி நேர நேரடி சோதனை பயிற்சி அதாவது எதிரிகள் தாக்குதல் போன்ற சூழ்நிலை சோதனை ரீதியாக உருவாக்கப்பட்டு அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப வேகமான முடிவெடுக்கும் திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பை மதிப்பீடு செய்யும் பயிற்சி ஆகியவை அடங்கும்.

CISF

பயிற்சி முடித்த பின், இந்த பெண்கள் துரித எதிர் நடவடிக்கை அணி (Quick Reaction Teams) மற்றும் சிறப்பு பணிக்குழு (Special Task Force போன்ற தகுதியில் விமான நிலையங்கள், பாராளுமன்றம், டெல்லி மெட்ரோ, மற்றும் முக்கிய அரசுத்துறைகள் போன்ற இடங்களில் பணியிலமர்த்தப்படுவர்.

தற்போது சிஐஎஸ்எஃப்பில் பெண்கள் சுமார் 8% (12,491 பேர்) மட்டுமே உள்ளனர். 2026க்குள் மேலும் 2,400 பெண்களை சேர்த்து 10% பங்கேற்பு விகிதத்தை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதான பாதுகாப்புத்துறையில் பெண்களின் செயல்திறனை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் முக்கிய அடையாளமாகும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

facebook twitter