9வது ஆண்டை கொண்டாடும் நாட்டின் மிகப்பெரிய சிறிய வங்கியான 'ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி', புதிய மற்றும் மேம்பட்ட மொபைல் வங்கிசேவை செயலி Equitas 2.0 அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் வாடிக்கையாளர் வசதி ஆகியவை மீது அதிகரிக்கும் கவனத்தை அடையாளமாக இது அமைகிறது.
மேம்படுத்தப்பட்ட மொபைல் வங்கிச்சேவை செயலி, வாடிக்கையாளர்களுக்கு வேகமான, மேம்பட்ட மற்றும் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குகிறது. புதிய கணக்குகளை ஆன்லைனில் துவக்குவது, ஆன்லைன் வைப்பு நிதி வசதி, வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி நிர்வாகம், ஐபிஓ அணுகல், கார்டு நிர்வாகம், பில் செலுத்தும் வசதி உள்ளிட்ட அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.
“புதிய மொபைல் வங்கிச்சேவை செயலியை அறிமுகம் செய்வதில் உற்சாகம் கொள்கிறோம். இது டிஜிட்டல் பரப்பில் எங்கள் நிலையை வலுவாக்குகிறது. இந்த செயலி அறிமுகம் எங்கள் தொழில்நுட்ப குழுவின் ஈடுபாட்டை உணர்த்துகிறது,” என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ வாசுதேவன் கூறியுள்ளார்.
“இந்த செயலி அறிமுகத்தின் வாயிலாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் செயலியை உருவாக்கியுள்ளோம். படிப்படியாக இந்த மேடை, இ-காமர்ஸ் முதல் பொழுதுபோக்கு வரை அனைத்து தேவைகளுக்கான ஒற்றை வழியாக அமையும்,” என வங்கியின் தொழில்நுட்பம், செயல்பாடுகள் செயல் இயக்குனர் பாலாஜி நுதலபாடி கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan