+

AI காரணமா? — 11% பேரை பணி நீக்குகிறது Freshworks

சென்னை தலைமையிலான SaaS நிறுவனமான Freshworks, உலகளவில் சுமார் 500 ஊழியர்களை (மொத்த பணியாளர்களில் -11%) பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு “AI யுகத்திற்கு வேகமாக மாறுதல்” என்ற காரணத்தால் எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறைக்கு என்ன சாதகம் செய்துள்ள

சென்னை தலைமையிலான SaaS நிறுவனமான Freshworks, உலகளவில் சுமார் 500 ஊழியர்களை (மொத்த பணியாளர்களில் -11%) பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு 'AI யுகத்திற்கு வேகமாக மாறுதல்' என்ற காரணத்தால் எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு இந்தத் துறைக்கு என்ன சாதகம் செய்துள்ளது என்பதல்ல அல்லது எந்த ஐடி துறைக்குமே செயற்கை நுண்ணறிவு என்ன சாதகம் செய்துள்ளது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில், சாதக அம்சம் இன்னும் அந்தத் துறைகளுக்கே தெரியவில்லை. ஆனால், அதைக் காரணம் காட்டி பலரையும் வேலையை விட்டு அனுப்பும் அராஜகம் தொடர்கிறது. அரசுகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதே சமூக விமர்சகர்களின் பார்வையாக உள்ளது. இதற்கு டிசிஎஸ் முதற்கொண்டு அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் கூறும் காரணம் ‘மறுசீரமைப்பு’.

மே 6 அன்று பணியாளர்களுக்கு அனுப்பிய உள்துறை கடிதத்தில், ப்ரெஷ்வொர்க்ஸ் தலைமைச் செயல் அதிகாரி டெனிஸ் உட்சைட்,

“AI காலத்தில் வேகமாக முன்னேறவும், முக்கிய வளர்ச்சி துறைகளில் கவனம் செலுத்தவும், உலகளாவிய பணியாளர்களை மறுசீரமைத்து வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

“இந்த முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை; பல திறமையான பணியாளர்களிடம் நாம் விடைபெற வேண்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

freshworks

எந்த ஊழியர்களுக்கு பாதிப்பு?

எந்தெந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி நிறுவனம் கூறும்போது, வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு உடனடியாக (30 நிமிடங்களில்) மேலாளர்கள் மூலம் தகவல் வழங்கப்படும் மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு உள்ளூர் விதிமுறைகளின்படி, அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் ஆனால், எந்த பிரிவுகள் அல்லது குழுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பது தெளிவாக கூறப்படவில்லை.

பணிநீக்கத்தின் காரணம் என்ன என்பதை CEO விளக்கமளித்தபோது, ஊழியர்களின் அனுபவ வளர்ச்சி, AI அடிப்படையிலான ஒப்பந்தங்கள் அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவ (CX) தள மேம்பாடுகள் போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருவேளை இவை எல்லாம் நல்ல நிலையில் இருந்தாலும்,

“AI காலத்தின் வேகம் மற்றும் உள்ளக மாற்றங்கள் நிறுவனத்தின் செயல்முறையை மாற்ற வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது,” என்று கூறினார். இதனால், நிறுவனம் தனது அமைப்பை சில முக்கிய இலக்குகளுக்கு ஏற்ப மாற்றுகிறது.
Freshworks

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு என்ன?

பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆதரவு, மரியாதையுடன் வெளியேற்றம் மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று கூறிய உட்சைட்,

“நிறுவனத்திற்கு நீங்கள் செய்த பங்களிப்பு என்றும் மதிப்பிற்குரியது,” என்றார்.

நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி கூற வேண்டுமென்றால் EX, AI, CX துறைகளில் வளர்ச்சியைத் தொடரும் புதிய அமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் ஆனால், நல்ல செயல்திறன் இருப்பதாக கூறிய அதே நேரத்தில் பெரிய அளவில் பணிநீக்கம் மேற்கொள்ளப்படுவது, 'AI' ஒரு காரணமா அல்லது ஒரு காரணம் காட்டலா என்ற கேள்வியை எழுப்புகிறது.

facebook twitter