+

Gold Rate Chennai: ரூ.75,000-த்தை தாண்டி அதிர்ச்சியை தந்துள்ள தங்கம் விலை - இனி என்ன ஆகும்?

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.700 அளவில் அதிகரித்துள்ளது. தற்போது ரூ.75,000-ஐ சவரன் விலை தாண்டி விட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75,000-ஐ தாண்டியிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.9,370 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.600 உயர்ந்து ரூ.74,960 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து ரூ.10,222 ஆகவும், சவரன் விலை ரூ.656 உயர்ந்து ரூ.81,776 ஆகவும் இருந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.700 அளவில் அதிகரித்துள்ளது. தற்போது ரூ.75,000-ஐ சவரன் விலை தாண்டி விட்டது. எனவே, சுப காரியங்களுக்கு அவசியம் எனில் மட்டுமே நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (6.8.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,380 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.75,040 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.10,233 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.81,864 ஆகவும் இருக்கிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (6.8.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,26,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் தங்கம் விலை அதிகரிக்க மிக முக்கிய காரணம் ஆகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார பின்னடைவுகள் முதலிய காரணங்களால், பெரிய முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை உயர்ந்து ஆபரணத் தங்கம் விலைவும் விண்ணை முட்டியிருக்கிறது. இந்த விலை உயர்வுப் போக்கு தொடரும் என அஞ்சப்படுகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,380 (ரூ.10 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.75,040 (ரூ.80 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,233 (ரூ.11 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,864 (ரூ.88 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,380 (ரூ.10 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.75,040 (ரூ.80 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,233 (ரூ.11 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,864 (ரூ.88 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter