+

'ஒரு முடிவை எடுக்க மூன்றில் ஒரு இந்தியர் சாட்ஜிபிடி, கூகுள் உதவியை நாடுகின்றனர்' - ஆய்வில் தகவல்!

நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்வதில் தொடங்கி நம் அன்பிற்குரியவருக்கு பரிசுப்பொருட்கள் தேர்வு செய்வது வரை இந்தியர்கள் கூகுள், சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தை நாடுவது வழக்கமாகி வருகிறது, இது ‘ஓவர் திங்க்கிங்’ அல்ல. மாறாக சுயசிந்தனையே இல்லாது போகும் நிலையை நோக்கிய நகர்வு என்றுதான் கூற வேண்டும். இது

நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்வதில் தொடங்கி நம் அன்பிற்குரியவருக்கு பரிசுப்பொருட்கள் தேர்வு செய்வது வரை இந்தியர்கள் கூகுள், சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தை நாடுவது வழக்கமாகி வருகிறது, இது ‘ஓவர் திங்க்கிங்’ அல்ல. மாறாக சுயசிந்தனையே இல்லாது போகும் நிலையை நோக்கிய நகர்வு என்றுதான் கூற வேண்டும். இதுவே ஒரு வழக்கமாகவே மாறிவிட்டதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

எதை ஒன்றயும் தேர்வு செய்வதில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டால், தெளிவுக்காக, உரையாடல் AI தளமான ChatGPT மற்றும் தேடுபொறி கூகிள் போன்ற புதிய யுக டிஜிட்டல் கருவிகளை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, என்று Center Fresh மற்றும் YouGov இன் கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

2,100 பேர் கொண்ட மாதிரி கணக்கெடுப்பில், 81% இந்தியர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிகமாகச் சிந்திப்பது தெரியவந்துள்ளது. அதில், நான்கில் ஒருவர் "இது ஒரு தொடர் பழக்கம்," என்று ஒப்புக்கொண்டனர்.

Google AI

'இந்தியா ஓவர்திங்கிங் ரிப்போர்ட்' படி, மூன்றில் ஒருவர் கூகிள் அல்லது ChatGPT ஐ பயன்படுத்தி ஒரு குறுஞ்செய்தியை டிகோட் செய்வதிலிருந்து பரிசு வாங்கும் முடிவை எடுப்பது வரை தாங்களே சிந்திப்பதைத் தவிர்க்கிறார்கள்.

மாணவர்கள், பணிபுரியும் நிபுணர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்று, இரண்டு, மூன்றாம் அடுக்கு நகரங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு, உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், டிஜிட்டல் மற்றும் சமூக வாழ்க்கை, டேட்டிங் மற்றும் உறவுகள் மற்றும் தொழில் மற்றும் தொழில்முறை வாழ்க்கை ஆகிய நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தியது.

அறிக்கையின்படி, கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 63% பேர், ஒரு உணவகத்தில் ஒரு உணவைத் தேர்ந்தெடுப்பது, "ஒரு அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை விட அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது..." என்று கூறியுள்ளனர்.

facebook twitter