
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம் கண்டு, சவரன் ரூ.75,000-ஐ நெருங்கியுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.9,295 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.40 உயர்ந்து ரூ.74,360 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 உயர்ந்து ரூ.10,140 ஆகவும், சவரன் விலை ரூ.40 உயர்ந்து ரூ.81,120 ஆகவும் இருந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. தற்போது ரூ.75,000-ஐ நெருங்கிவிட்டதால் சுப காரியங்களுக்கு அவசியம் எனில் மட்டுமே நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையில் இன்று மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்கிழமை (5.8.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.9,370 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.600 உயர்ந்து ரூ.74,960 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து ரூ.10,222 ஆகவும், சவரன் விலை ரூ.656 உயர்ந்து ரூ.81,776 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (5.8.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.125 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,23,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க விதிப்பு, சர்வதேச பொருளாதார பின்னடைவுகள் முதலிய காரணங்களால், பெரிய முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை உயர்ந்து ஆபரணத் தங்கம் விலைவும் விண்ணை முட்டியிருக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,370 (ரூ.75 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,960 (ரூ.600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,222 (ரூ.82 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,776 (ரூ.656 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,370 (ரூ.75 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,960 (ரூ.600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,222 (ரூ.82 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,776 (ரூ.656 உயர்வு)
Edited by Induja Raghunathan