
இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை வர்த்தம் தொடங்கியதில் இருந்தே தடுமாற்றம் கண்டுள்ளது. எனினும், பல்வேறு நிறுவனப் பங்குகள் சரிவில் சிக்காமல் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஆக.5) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 124.18 புள்ளிகள் சரிந்து 80,834.43 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 21.85 புள்ளிகள் சரிந்து 24,671.40 ஆக இருந்தது.
இந்தியாவுக்கு வர்த்தக ரீதியில் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய மிரட்டல், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை உள்ளிட்டவை இந்திய பங்குச் சந்தையில் இன்று தாக்கத்தை தந்துள்ளன. ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, டைடன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றமும், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், எல் அண்ட் டி, டிசிஎஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் இறக்கமும் கண்டன.
இன்று பிற்பகல் 1.45 மணியளவில் சென்செக்ஸ் 51.27 புள்ளிகள் சரிந்து 80,658.98 ஆகவும், நிஃப்டி 46.15 புள்ளிகள் சரிந்து 24,603.40 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ மற்றும் ஷாங்காயில் ஏற்றமும், சியோல் மற்றும் ஹாங்காங்கில் இறக்கமும் நிலவுகிறது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டல் உள்ளிட்ட காரணிகளால் பாதக சூழல் ஏற்பட்டாலும் கூட, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் மீளத் தொடங்கியது கவனிக்கத்தக்கது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
அதானி போர்ட்ஸ்
எஸ்பிஐ
டைடன் கம்பெனி
பாரதி ஏர்டெல்
ஆக்சிஸ் பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
என்டிபிசி
கோடக் மஹிந்திரா பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
மாருதி சுசுகி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எல் அண்ட் டி
டிசிஎஸ்
ஐடிசி
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபின்சர்வ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டெக் மஹிந்திரா
எடர்னல் லிட்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
நெஸ்லே இந்தியா
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.72 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan