
ஆபரணத் தங்கம் விலை இன்று வெகுவாக சரிந்துள்ளது. நகை வாங்க விழைவோருக்கு இது மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,12,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,273 ஆகவும், சவரன் விலை ரூ.1,22,184 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,440 குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1,10,560 ஆக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (5.5.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.180 குறைந்து ரூ.13,820 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.196 குறைந்து ரூ.15,077 ஆகவும், சவரன் விலை ரூ.1,568 குறைந்து ரூ.1,20,616 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (5.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.35 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் வெகுவாக குறைந்துள்ளது. இதுவும் ஆபரணத் தங்கம் விலையில் எதிரொலித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,820 (ரூ.180 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,560 (ரூ.1,440 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,077 (ரூ.196 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,616 (ரூ.1,568 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,820 (ரூ.180 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,560 (ரூ.1,440 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,077 (ரூ.196 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,616 (ரூ.1,568 குறைவு)
Edited by Induja Raghunathan