
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று அதே வேகத்தில் சரிந்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு ஆறுதல் அளித்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.14,870 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.1,18,960 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.131 உயர்ந்து ரூ.16,222 ஆகவும், சவரன் விலை ரூ.1,048 உயர்ந்து ரூ.1,29,776 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலையில் இன்று ஒரே நாளில் ரூ.960 சரிந்தது. தற்போது சவரன் விலை ரூ.1.18 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையும் இன்று ரூ.15,000 குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (20.5.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 சரிந்து ரூ.14,750 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.960 சரிந்து ரூ.1,18,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.131 சரிந்து ரூ.16,091 ஆகவும், சவரன் விலை ரூ.1,048 சரிந்து ரூ.1,28,728 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (20.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.15 குறைந்து ரூ.285 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.15,000 குறைந்து ரூ.2,85,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.78 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,750 (ரூ.120 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,000 (ரூ.960 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,091 (ரூ.131 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,728 (ரூ.1,048 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,750 (ரூ.120 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,000 (ரூ.960 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,091 (ரூ.131 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,728 (ரூ.1,048 குறைவு)
Edited by Induja Raghunathan