Gold Rate Chennai: மீண்டும் அதிரடி - தங்கம் விலை ரூ.960 உயர்வு!

11:13 AM May 19, 2026 | Jai s

வாரத்தின் முதல் நாளான நேற்று மாற்றமின்றி அமைதி காத்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,750 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,18,000 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16,091 ஆகவும், சவரன் விலை ரூ.1,28,728 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆனது.

தங்கம் விலையில் இன்று ஒரே நாளில் ரூ.960 அதிகரித்தது. தற்போது சவரன் விலை ரூ.1.19 லட்சத்தை நெருங்கியுள்ளது. எனினும், வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (19.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.14,870 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.1,18,960 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.131 உயர்ந்து ரூ.16,222 ஆகவும், சவரன் விலை ரூ.1,048 உயர்ந்து ரூ.1,29,776 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (19.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.300 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.39 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,870 (ரூ.120 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,960 (ரூ.960 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,222 (ரூ.131 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,29,776 (ரூ.1,048 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,870 (ரூ.120 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,960 (ரூ.960 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,222 (ரூ.131 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,29,776 (ரூ.1,048 உயர்வு)


Edited by Induja Raghunathan