+

VDart டிஜிட்டல் நிறுவன துணைத் தலைவராக முன்னாள் தலைவர் ராஜேஷ் துபே நியமனம்!

சர்வதேச டிஜிட்டல் மாற்றம், தொழில்நுட்ப சேவைகள் நிறுவனம் விடார்ட் டிஜிட்டல் (VDart Digital), நிறுவன செயலி சேவைகள், துணைத்தலைவர் மற்றும் செயலாக்க வழிகாட்டியாக ராஜேஷ் துபேவை நியமனம் செய்வதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச டிஜிட்டல் மாற்றம், தொழில்நுட்ப சேவைகள் நிறுவனம் 'வி டார்ட் டிஜிட்டல்' (VDart Digital), நிறுவன செயலி சேவைகள், துணைத்தலைவர் மற்றும் செயலாக்க வழிகாட்டியாக ராஜேஷ் துபேவை நியமனம் செய்வதாக தெரிவித்துள்ளது.

ராஜேஷ் துபே, நிறுவனங்கள் சார்ந்த டிஜிட்டல் மாற்ற திட்டங்கள், இ.ஆர்.பி நவீனமாக்க சேவைகள், கிளவுட் சேவைகள், நிறுவன மேடை மாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டு கால அனுபவம் உள்ளவர்.

vdart

புதிய பொறுப்பில், ராஜேஷ் துபே, 'வி டார்ட் டிஜிட்டல்' நிறுவனத்தின் நிறுவனங்கள் செயலி சேவைகள் தொகுப்பை கவனித்துக்கொள்வார். ஆரக்கிள், எஸ்.ஏ.பி., சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட மேடைகள் இதில் அடங்கும். புதுமையாக்கம், டெலிவரி மேன்மை, ஏஐ சார்ந்த நவீனமயமாக்கல் உள்ளிட்டவற்றிலும் அவர் கவனம் செலுத்துவார்.

“ராஜேஷ் நியமனம் வளர்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக அமைகிறது. நிறுவன செயலி சேவைகள், மாற்றத்திற்கான திறன் ஆகியவற்றை வலுவாக்கும் உத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என வி டார்ட் டிஜிட்டல் சி.இ.ஓ.முகமது இர்பான் பீரான் கூறியுள்ளார்.

இதற்கு முன் ராஜேஷ் துபே, விப்ரோ நிறுவனத்தில் செயலாக்க டெலிவரி தலைவராக பணியாற்றி இருக்கிறார். நிறுவனங்கள் செயலி தொகுப்பை நிர்வகித்து வந்தவர், தொழில்நுட்ப மாற்ற திட்டங்களை வழிநடத்தியுள்ளார்.

“வி டார்ட் டிஜிட்டல், சர்வதேச நிறுவனங்களுக்கு நடைமுறை சார்ந்த தீர்வுகள் நோக்கிலான பலன்களை அளிப்பதில் வி டார்ட் வலுவான மதிப்பை பெற்றுள்ளது. இதன் முக்கியமான வளர்ச்சி கட்டத்தில் இந்த பொறுப்பை ஏற்பதில் உற்சாகம் கொள்கிறேன்,” என்று ராஜேஷ் துபே கூறியுள்ளார்.

Edited by Induja Raghunathan

facebook twitter