+

Stock News: ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பங்குச் சந்தையில் தடுமாற்றம்!

மேற்கு ஆசிய நாடுகளில் மோதல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலராக அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் நெகட்டிவ் போக்கு நிலவுகிறது.

மேற்கு ஆசிய பதற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் வீழ்ச்சி நிலவி வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 18) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 833.20 புள்ளிகள் சரிந்து 74,404.79 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 23,401.70 ஆக இருந்தது.

“மேற்கு ஆசிய நாடுகளில் மோதல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலராக அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் நெகட்டிவ் போக்கு நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. அதானி போர்ட்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 345.95 புள்ளிகள் சரிந்து 74,892.04 ஆகவும், நிஃப்டி 115.10 புள்ளிகள் சரிந்து 23,528.40 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகப் போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசிய நாடுகளில் மோதல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலராக அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் நெகட்டிவ் போக்கு நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

டெக் மஹிந்திரா

பாரதி ஏர்டெல்

நெஸ்லே இந்தியா

இன்போசிஸ்

சன் பார்மா

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டிசிஎஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

ஐடிசி

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

டாடா ஸ்டீல்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் யூனிலீவர்

கோடக் மஹிந்திரா பேங்க்

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

டாடா மோட்டாரஸ்

மாருதி சுசுகி

ஏசியன் பெயின்ட்ஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

என்டிபிசி

எடர்னல்

ஆக்சிஸ் பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எல் அண்ட் டி

எம் அண்ட் எம்

எஸ்பிஐ

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.30 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

Edited by Induja Raghunathan

facebook twitter