+

Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே குறைந்து ரூ.1.18 லட்சத்துக்கு விற்பனை!

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,280 சரிந்த நிலையில், இன்று சற்றே குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1.18 லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.15,000 குறைந்தது.

வாரத்தின் கடைசி நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று மட்டும் குறைந்துள்ளது. கடும் உயர்வுக்குப் பிறகு தொடர்ந்து விலை குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

சென்னையில் வெள்ளிக்கிழமை இருமுறை தங்கம் விலை குறைந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,765 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,18,120 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16,108 ஆகவும், சவரன் விலை ரூ.1,28,864 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,280 சரிந்த நிலையில், இன்று சற்றே குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1.18 லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.15,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (16.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.14,750 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.1,18,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17 குறைந்து ரூ.16,091 ஆகவும், சவரன் விலை ரூ.136 குறைந்து ரூ.1,28,728 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (16.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.15 குறைந்து ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.15,000 குறைந்து ரூ.2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.99 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் சரிந்துள்ளது. இதனால் ஆபரணத் தங்கம் விலையும் குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,750 (ரூ.15 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,000 (ரூ.120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,091 (ரூ.17 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,728 (ரூ.136 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,750 (ரூ.15 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,000 (ரூ.120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,091 (ரூ.17 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,728 (ரூ.136 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter