+

Stock News: பங்குச் சந்தையில் பாசிட்டிவ் போக்கு - ஐடி பங்குகளுக்கு மவுசு!

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் நிலவும் சாதகப் போக்கும், ஐடி நிறுவனப் பங்குகளுக்கு கூடிய மவுசும் இந்திய பங்குச் சந்தையில் பாசிட்டிவ் போக்குக்கு வித்திட்டுள்ளன.

ஐடி நிறுவனப் பங்குகளுக்கு மவுசு கூடியுள்ளது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம் நிலவி வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 15) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 451.46 புள்ளிகள் உயர்ந்து 75,850.18 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 143.25 புள்ளிகள் உயர்ந்து 23,832.85 ஆக இருந்தது.

“எரிபொருள் விநியோகப் பிரச்சினையின் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் நிலவும் சாதகப் போக்கும், ஐடி நிறுவனப் பங்குகளுக்கு கூடிய மவுசும் இந்திய பங்குச் சந்தையில் பாசிட்டிவ் போக்குக்கு வித்திட்டுள்ளன,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. எல் அண்ட் டி, எம் அண்ட் எம், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 72.76 புள்ளிகள் உயர்ந்து 75,471.48 ஆகவும், நிஃப்டி 30.85 புள்ளிகள் உயர்ந்து 23,720.45 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்கு நீடிக்கிறது. எரிபொருள் விநியோகப் பிரச்சினையின் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் நிலவும் சாதகப் போக்கும், ஐடி நிறுவனப் பங்குகளுக்கு கூடிய மவுசும் இந்திய பங்குச் சந்தையில் பாசிட்டிவ் போக்குக்கு வித்திட்டுள்ளன.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் யூனிலீவர்

கோடக் மஹிந்திரா பேங்க்

நெஸ்லே இந்தியா

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

டாடா மோட்டாரஸ்

மாருதி சுசுகி

டிசிஎஸ்

இன்போசிஸ்

டெக் மஹிந்திரா

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

பாரதி ஏர்டெல்

சன் பார்மா

அதானி போர்ட்ஸ்

ஐடிசி

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

டாடா ஸ்டீல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஏசியன் பெயின்ட்ஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

என்டிபிசி

எடர்னல்

ஆக்சிஸ் பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எல் அண்ட் டி

எம் அண்ட் எம்

எஸ்பிஐ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.95 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter