+

Stock News: யுஎஸ் - சீனா பேச்சு தாக்கம்: பங்குச் சந்தையில் பச்சை விளக்கு!

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் தாக்கத்தால் ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் சாதகப் போக்கு நிலவுகிறது.

ஆசிய பங்குச் சந்தைகளின் சாதகப் போக்கு தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம் நிலவி வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 14) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 450.51 புள்ளிகள் உயர்ந்து 75,059.49 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 169.95 புள்ளிகள் உயர்ந்து 23,582.55 ஆக இருந்தது.

“அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் தாக்கத்தால் ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் சாதகப் போக்கு நிலவுகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் பாரதி ஏர்டெல், சன் பார்மா, எடர்னல், அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. மாருதி சுசுகி, ஆக்சிஸ் பேங்க், டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 294.49 புள்ளிகள் உயர்ந்து 74,903.47 ஆகவும், நிஃப்டி 132.40 புள்ளிகள் உயர்ந்து 23,545.00 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்கு நீடிக்கிறது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் தாக்கத்தால் ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் சாதகப் போக்கு நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

பாரதி ஏர்டெல்

சன் பார்மா

எடர்னல்

அதானி போர்ட்ஸ்

எல் அண்ட் டி

ஐடிசி

என்டிபிசி

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

ஐசிஐசிஐ பேங்க்

எம் அண்ட் எம்

டாடா ஸ்டீல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் யூனிலீவர்

கோடக் மஹிந்திரா பேங்க்

இண்டஸ்ட்இண்ட் பேங்க்

நெஸ்லே இந்தியா

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

டாடா மோட்டாரஸ்

மாருதி சுசுகி

ஆக்சிஸ் பேங்க்

டிசிஎஸ்

இன்போசிஸ்

டெக் மஹிந்திரா

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.88 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter