+

Gold Rate Chennai: ரூ.800 குறைந்த தங்கம் விலை - வெள்ளியும் சரிவு!

தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பின் தாக்கத்தால் ஆபரணத் தங்கம் விலை வெகுவாக உயர்ந்த நிலையில், இன்று ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் இன்ரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது.

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு ஓரளவு ஆறுதலைத் தந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.15,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 உயர்ந்து ரூ.16,418 ஆகவும், சவரன் விலை ரூ.432 உயர்ந்து ரூ.1,31,344 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பின் தாக்கத்தால் ஆபரணத் தங்கம் விலை வெகுவாக உயர்ந்த நிலையில், இன்று ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் இன்ரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (15.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.14,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.1,19,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.16,309 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.1,30,472 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (15.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.305 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.3,05,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.94 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்குமாக உள்ளது.

தங்கம் மீதான இறக்குமதி அதிகரிப்பு பெரும் தாக்கம் தந்தாலும் கூட, தங்கம் மீதான முதலீடு சர்வதேச அளவில் குறைந்ததால் ஆபரணத் தங்கம் விலை சரிந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,950 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,600 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,309 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,472 (ரூ.872 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,950 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,600 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,309 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,472 (ரூ.872 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter