
ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,20,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16,364 ஆகவும், சவரன் விலை ரூ.1,30,912 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பின் தாக்கத்தால் ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.400 கூடியது. தற்போது சவரன் விலை ரூ.1.20 லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (14.5.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.15,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 உயர்ந்து ரூ.16,418 ஆகவும், சவரன் விலை ரூ.432 உயர்ந்து ரூ.1,31,344 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (14.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.315 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.3,15,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.82 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்குமாக உள்ளது. இத்துடன், அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நடவடிக்கையாக, தங்கம் இறக்குமதி வரி 6-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,050 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,400 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,418 (ரூ.54 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,31,344 (ரூ.432 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,050 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,400 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,418 (ரூ.54 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,31,344 (ரூ.432 உயர்வு)
Edited by Induja Raghunathan