+

ரூ.150 கோடி வெஞ்ச்சர் கேபிடல் நிதியை அறிமுகம் செய்துள்ளது D2C Insider

D2C Insider நிறுவனம் ‘ConsumerX Ventures’ என்ற பெயரில் ரூ.150 கோடி மதிப்பிலான புதிய வெஞ்ச்சர் கேபிடல் (VC) நிதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிதி, ஆரம்ப கட்டத்தில் உள்ள நேரடி நுகர்வோர் (D2C) பிராண்டுகள் மற்றும் அவற்றை ஆதரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது

D2C Insider நிறுவனம் ‘ConsumerX Ventures’ என்ற பெயரில் ரூ.150 கோடி மதிப்பிலான புதிய வெஞ்ச்சர் கேபிடல் (VC) நிதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிதி, ஆரம்ப கட்டத்தில் உள்ள நேரடி நுகர்வோர் (D2C) பிராண்டுகள் மற்றும் அவற்றை ஆதரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது.

தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதன்படி, Category II Alternative Investment Fund (AIF) அமைப்பின் கீழ் இயங்கும் இந்த ‘ConsumerX Ventures’ நிதி, சுமார் 25 ஆரம்ப நிலை D2C பிராண்டுகள் மற்றும் enabler நிறுவனங்களில் pre-seed மற்றும் seed கட்டங்களில் முதலீடு செய்ய உள்ளது. ஒவ்வொரு முதலீட்டிற்கும் சராசரியாக ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை முதலீடு செய்யப்படலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலீடு செய்யப்படும் நிறுவனங்களில் 10% முதல் 15% வரை பங்குகளைப் பெறும் நோக்கத்துடன் இந்த நிதி செயல்படும். அதேசமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்'களுக்கு அடுத்த கட்ட முதலீடுகளை வழங்குவதற்காக மொத்த நிதியின் 40% தொகை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் ஷா இந்த நிதியின் நிர்வாகக் கூட்டாளியாகச் செயல்பட உள்ளார். தற்போது D2C Insider Super Angels நிதியை நிர்வகித்து வரும் சாவி பரத்வாஜ் கர்கோயங்கர், ConsumerX Ventures-இன் கூட்டாளியாக இணைகிறார்.

இந்த நிதியில் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் விரைவில் ரோட் ஷோ நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு பெரிய நுகர்வோர் குழுமம் anchor investor ஆக இணையுவதற்கான முன்னேற்றமான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

D2C

Gen Z மற்றும் மில்லேனியல் தலைமுறையினரின் நுகர்வு பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் ConsumerX Ventures செயல்பட உள்ளது. அதோடு, Tier-II மற்றும் Tier-III நகரங்கள் மற்றும் அதற்கு அப்பாலான பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் quick commerce மற்றும் e-commerce தளங்களையும் இந்த நிதி குறிவைக்கிறது.

இந்த நிதி, லாபகரத்தன்மையை நோக்கிய தெளிவான திட்டத்துடன் ரூ.100 கோடி வருவாயை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும், அடுத்த 18 மாதங்களுக்குள் முன்னணி VC நிறுவனங்களிடமிருந்து Series A முதலீட்டையும் திரட்ட திட்டமிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சமூக வலைதள செயலியில் ஒரு சமூகமாக தொடங்கப்பட்ட D2C Insider, தற்போது இந்தியா முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 20,000-க்கும் அதிகமான பிராண்டுகள், 7,500-க்கும் மேற்பட்ட enabler founders மற்றும் 2,500-க்கும் அதிகமான முதலீட்டாளர்களைக் கொண்ட வலையமைப்பாக வளர்ந்துள்ளது.

இதன் நிறுவுனர் உறுப்பினர்களாக அர்ஜுன் வைத்யா, ஆதித்ய கன்னா, அமன் குப்தா, கஜல் அலக், ஹிதேஷ் திங்ரா, மணீஷ் சவுத்ரி, தருண் சர்மா, மற்றும் மோஹித் சதானி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது, D2C Insider நிறுவனம் ரூ.25 கோடி corpus-ஐ கொண்ட Category I AIF நிதியான ‘சூப்பார் ஏஞ்சல்ஸ்’-ஐ செயல்படுத்தி வருகிறது. இந்த நிதிக்கு 70-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர் லிமிடெட் பார்ட்னர்ஸ் ஆதரவளித்து வருகின்றனர்.

facebook twitter