+

Gold Rate Chennai: வீக் எண்ட் ஷாக் - தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,840 அதிகரிப்பு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,840 உயர்ந்து, சவரன் ரூ.1,09,280 ஆக உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 4-வது நாளாக அதிகரித்து. சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.13,430 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.14,651 ஆகவும், சவரன் விலை ரூ.696 உயர்ந்து ரூ.1,17,208 ஆகவும் விற்பனை ஆனது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,840 உயர்ந்து, சவரன் ரூ.1,09,280 ஆக உள்ளது. வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (28.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.230 உயர்ந்து ரூ.13,660 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,840 உயர்ந்து ரூ.1,09,280 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.251 உயர்ந்து ரூ.14,902 ஆகவும், சவரன் விலை ரூ.2,008 உயர்ந்து ரூ.1,19,216 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (28.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.86 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. தற்போது, பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீடு உயரத் தொடங்கியிருப்பதே ஆபரணத் தங்கம் விலை உயர்வுக்கும் காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,660 (ரூ.230 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,280 (ரூ.1,840 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,902 (ரூ.251 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,216 (ரூ.2,008 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,660 (ரூ.230 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,280 (ரூ.1,840 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,902 (ரூ.251 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,216 (ரூ.2,008 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter