+

Gold Rate Chennai: சற்றே குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.200 மட்டும் குறைந்தது. சவரன் விலை ரூ.1,12,800 ஆக இருக்கிறது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை.

வாரத்தின் கடைசி நாளான இன்று ஆரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.125 உயர்ந்து ரூ.14,125 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,13,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.136 உயர்ந்து ரூ.15,409 ஆகவும், சவரன் விலை 1,088 உயர்ந்து ரூ.1,23,272 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.200 மட்டும் குறைந்தது. சவரன் விலை ரூ.1,12,800 ஆக இருக்கிறது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (11.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 குறைந்து ரூ.15,382 ஆகவும், சவரன் விலை 216 குறைந்து ரூ.1,23,056 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (11.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,65,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.09 ஆக உள்ளது

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், பதற்றம் குறைந்தபாடில்லை. ஆனால், பேச்சுவார்த்தை தொடரும் என தெரிகிறது. தற்போது, தங்கம் மீதான முதலீடு சற்று குறைந்ததால் ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,100 (ரூ.25 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,382 (ரூ.27 குறைவு

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.216 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,100 (ரூ.25 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,382 (ரூ.27 குறைவு

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.216 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter