+

Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே குறைவு - வெள்ளி விலையில் மாற்றமில்லை!

கடந்த வார இறுதி நாட்களில் வெகுவாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை.

வாரத்தில் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.230 உயர்ந்து ரூ.13,660 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,840 உயர்ந்து ரூ.1,09,280 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.251 உயர்ந்து ரூ.14,902 ஆகவும், சவரன் விலை ரூ.2,008 உயர்ந்து ரூ.1,19,216 ஆகவும் விற்பனை ஆனது.

கடந்த வார இறுதி நாட்களில் வெகுவாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (30.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.13,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,08,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து ரூ.14,837 ஆகவும், சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.1,18,696 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (30.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,50,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.74 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. தற்போது, லாப நோக்கத்துடன் தங்கம் விற்கப்பட்டு வருவதால் ஆபரணத் தங்கம் விலையும் குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,600 (ரூ.60 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,800 (ரூ.480 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,837 (ரூ.65 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,696 (ரூ.520 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,600 (ரூ.60 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,800 (ரூ.480 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,837 (ரூ.65 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,696 (ரூ.520 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter