Gold Rate Chennai: ஏறிய வேகத்தில் சற்று இறங்கிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

11:19 AM Apr 02, 2026 | Jai s

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3,000-க்கும் மேலாக அதிகரித்த நிலையில், இன்று ரூ.800 அளவில் குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு சற்றே ஆறுதலாக உள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.380 உயர்ந்து ரூ.14,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.414 உயர்ந்து ரூ.15,327 ஆகவும், சவரன் விலை ரூ.3,312 உயர்ந்து ரூ.1,22,616 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (2.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.1,11,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.15,218 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.1,21,744 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (2.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,55,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.34 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. தற்போது, தங்கத்தை விற்கும் போக்கு அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,950 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,600 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,218 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,744 (ரூ.873 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,950 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,600 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,218 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,744 (ரூ.873 குறைவு)


Edited by Induja Raghunathan