+

Gold Rate Chennai: வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி - விலை நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.1.05 லட்சத்தை தாண்டிவிட்டது. அதேபோல், வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் கண்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.220 உயர்ந்து ரூ.13,120 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,760 உயர்ந்து ரூ.1,04,960 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.348 உயர்ந்து ரூ.14,313 ஆகவும், சவரன் விலை ரூ.2,784 உயர்ந்து ரூ.1,14,405 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.1.05 லட்சத்தை தாண்டிவிட்டது. அதேபோல், வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்கிழமை (13.1.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,170 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 உயர்ந்து ரூ.14,368 ஆகவும், சவரன் விலை ரூ.440 உயர்ந்து ரூ.1,14,944 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (13.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.292 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,92,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.24 ஆக உள்ளது. தற்போது ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாலும், சர்வதேச அரசியல் - பொருளாதாரச் சூழல் பதற்றங்களால் பாதுகாப்பான தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியதாலும் ஆபரணத் தங்கம் விலையும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,170 (ரூ.50 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,360 (ரூ.400 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,368 (ரூ.55 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,944 (ரூ.440 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,170 (ரூ.50 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,360 (ரூ.400 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,368 (ரூ.55 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,944 (ரூ.440 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter