Gold Rate Chennai: ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்து சவரன் ரூ.1.05 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை!

11:10 AM Jan 12, 2026 | Jai s

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது, நகை வாங்க விழைவோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.12,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,03,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.110 உயர்ந்து ரூ.13,973 ஆகவும், சவரன் விலை ரூ.880 உயர்ந்து ரூ.1,14,505 ஆகவும் விற்பனை ஆனது.

சர்வதேச அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை இப்போது ரூ.1.05 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (12.1.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.220 உயர்ந்து ரூ.13,120 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,760 உயர்ந்து ரூ.1,04,960 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.348 உயர்ந்து ரூ.14,313 ஆகவும், சவரன் விலை ரூ.2,784 உயர்ந்து ரூ.1,14,405 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (12.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ரூ.287 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.12,000 உயர்ந்து ரூ.2,87,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.22 ஆக உள்ளது.

தற்போது ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாலும், சர்வதேச அரசியல் - பொருளாதாரச் சூழல் பதற்றங்களால் பாதுகாப்பான தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் கடுமையாக உயரத் தொடங்கியிருக்கிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,120 (ரூ.220 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,960 (ரூ.1,270 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,313 (ரூ.348 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,405 (ரூ.2,784 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,120 (ரூ.220 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,960 (ரூ.1,270 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,313 (ரூ.348 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,405 (ரூ.2,784 உயர்வு)


Edited by Induja Raghunathan