+

Gold Rate Chennai: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.720 குறைவு - தொடருமா அதிரடி சரிவு?

தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.1000 அளவில் குறைந்தாலும் கூட, சவரன் விலை என்பது ரூ.84,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம்.

வரலாற்று உச்சங்களைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு பெரிதும் நிம்மதி தந்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.10,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.84,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.11,564 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.92,512 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.1000 அளவில் குறைந்தாலும் கூட, சவரன் விலை என்பது ரூ.84,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (25.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 குறைந்து ரூ.10,510 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.720 குறைந்து ரூ.84,080 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.98 குறைந்து ரூ.11,466 ஆகவும், சவரன் விலை ரூ.784 குறைந்து ரூ.91,728 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (25.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.150 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,50,000 ஆகவும் நீடிக்கிறது.

தங்கம் விலை சரிவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அந்த வகையில், தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.66 ஆக உள்ளது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று மீட்சி காணப்படுவதால் தங்கம் விலை குறைந்துள்ளது.

gold rate today

அத்துடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் சற்றே குறையத் தொடங்கியுள்ளது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் பொருளாதார சூழல்களைப் பொறுத்தே ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு தொடருமா அல்லது மீண்டும் கூடுமா என்பது தெரியவரும்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,510 (ரூ.90 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,080 (ரூ.720 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,466 (ரூ.98 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.91,728 (ரூ.784 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,510 (ரூ.90 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,080 (ரூ.720 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,466 (ரூ.98 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.91,728 (ரூ.784 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter