+

‘15 ஆண்டுகளில் இந்தியா 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்’ - அமைச்சர் தகவல்

இந்தியா அடுத்த 15 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இத்திட்டங்கள் அரசுத் திட்டப் பணி மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாட்டுப் பணித்திட்டங்களின் இணைவாக இருக்கும் என்று அமைச

இந்தியா அடுத்த 15 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இத்திட்டங்கள் அரசுத் திட்டப் பணி மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாட்டுப் பணித்திட்டங்களின் இணைவாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இரண்டாவது தேசிய விண்வெளி தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இத்தகவலை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்தார். இந்த நிகழ்வில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இன்பேஸ் தலைவர் பவன் கோயங்கா மற்றும் ககன்யான் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் பங்கேற்றனர்.

ISRO

மேலும், அமைச்சர் ஜிதேந்திர சிங் விண்வெளித்துறைக்கான அடுத்த 15 ஆண்டுகளுக்கான செயல்திட்ட வரைபடத்தையும் வெளியிட்டார். இந்த வரைபடம் 2040 மற்றும் அதற்குப் பிறகான இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை வழிநடத்தும் என்று கூறினார். இது உணவுப் பாதுகாப்பு, நீர்நிலைத்தன்மை, பேரழிவுகளுக்கு எதிரான தடுப்புத்திறன் மற்றும் பரந்த வளர்ச்சியை ஆதரிக்கக் கூடியதாகும்.

“இந்தியாவின் விண்வெளித் திட்டம் இப்போது ஒரு மாற்றத்தினை சந்தித்து வருகிறது. இது இனி குறியீட்டுச் சாதனைகளாக இல்லாமல், அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள் நலம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. தனியார்துறைக்கு விண்வெளி துறையைத் திறந்தது, புதுமை மற்றும் தொழில் முனைவில் புதிய அலை ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஒருகாலத்தில் அரசு திட்டங்களுக்கு மட்டுமே உட்பட்ட இந்த துறை, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள் விண்வெளி மற்றும் அரசுத் துறைகளில் பயன்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

Jitendra Singh

விண்வெளி தொழில்நுட்பம் இப்போது மக்கள் வாழ்க்கையில் மெளனமாகவே புகுந்துவிட்டதாகவும், பேரழிவு மேலாண்மை, உள்கட்டமைப்பு கண்காணிப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் மற்றும் ட்ரோன் மூலமாக நில உரிமை வரைபடம் போன்ற பலவகைகளும் இவை பயன்படுகிறது.

மனிதர்களில்லாத ககன்யான்-1 விண்வெளி பயணம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என்றும், இந்த பயணத்தில் வியோம்மித்ரா எனும் ஹ்யூமனாய்டு ரோபோ விண்வெளிக்கு செல்லும். 2027 ஆம் ஆண்டில், ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியா தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தையும் அதைத் தொடர்ந்து 2028 இல் சந்திரயான்-4, வெள்ளிக்கு ஒரு பயணம், மற்றும் 2035 ஆம் ஆண்டுக்குள் முன்மொழியப்பட்ட பாரத் அந்தரிக்ஷ் நிலையத்தை நிறுவுதல் ஆகியவற்றை முயற்சிக்கும். 2040-ஆம் ஆண்டுக்குள் ஒரு இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அனுப்பவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.

facebook twitter