+

ஊழியர்களுக்கு கணிசமான போனஸ் வழங்கிய Infosys - பலருக்கு 80% மேல் போனஸ் அறிவிப்பு!

இன்ஃபோசிஸ் ஐடி சேவைகள் நிறுவனம் எதிர்பார்த்ததை விட சிறந்த முடிவுகளைப் பதிவு செய்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு சராசரியாக 80% ஊதியத்தை வழங்கும் செயல்திறன் போனஸ் அறிவித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததை விட வலுவான வருவாய் ஈட்டியதை அடுத்து, இன்ஃபோசிஸ் புதன்கிழமை செயல்

இன்ஃபோசிஸ் ஐடி சேவைகள் நிறுவனம் எதிர்பார்த்ததை விட சிறந்த முடிவுகளைப் பதிவு செய்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு சராசரியாக 80% ஊதியத்தை வழங்கும் செயல்திறன் போனஸ் அறிவித்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததை விட வலுவான வருவாய் ஈட்டியதை அடுத்து, இன்ஃபோசிஸ் புதன்கிழமை செயல்திறன் போனஸ் கடிதங்களை வெளியிட்டது, சில ஊழியர்களுக்கு 89 சதவீதம் போனஸ் வழங்க அறிவித்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கு, நிறுவனத்தின் சராசரி திறன் போனஸ் 80% ஆக நிர்ணயிக்கப்பட்டது, இது ஜனவரி-மார்ச் காலாண்டின் 65% விகிதத்தை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

ஊழியர்களின் தனிப்பட்ட செயல்திறன் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் இந்த விகிதங்கள் மாறுபட்டுள்ளன. கடந்த காலாண்டில் (Q1 FY26) 75% முதல் 89% வரை போனஸ் வழங்கப்பட , முந்தைய காலாண்டில் (Q4 FY25) அது 50%-70% மட்டுமே வழங்கப்பட்டது.

infosys

யாருக்கு எவ்வளவு?

இன்போசிஸின் 3.23 லட்சம் ஊழியர்களில் பெரும்பாலானோர் PL4, PL5 மற்றும் PL6 நிலைகளில் உள்ளவர்கள். PL4 நிலையில் இருக்கும் மூத்த இன்ஜினியர்கள், சிஸ்டம் இன்ஜினியர்கள், டெக்னாலஜி அனலிஸ்ட்கள் மற்றும் கன்சல்டண்ட்களுக்கு 80%-89% வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளது. PL5 நிலையை சேர்ந்த டிராக் லீட்களுக்கு 78%-87% வரை, PL6 நிலையை சேர்ந்த மேனேஜர்கள், டெலிவரி மேனேஜர்கள் மற்றும் அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கு 75%-85% வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் – “outstanding” முதல் “need attention” ஆகிய மதிப்பீடுகளுடன் வழங்கப்பட்டுள்ளன. சம்பளத்துடன் இணைத்து ஆகஸ்ட் மாதத்துக்கான ஊதியத்தில் இந்த போனஸ் செலுத்தப்படும்.

இப்போது தொழில்துறையில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தள்ளிப் போட்டு வர, சில நிறுவனங்கள் பணிநீக்கத்தையும் (layoffs) மேற்கொண்டு வருகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இந்த ஆண்டில் தனது பணியாளர்களில் 2% பேர் – சுமார் 12,000 பேர் – பணிநீக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலைகளின் நடுவில் இன்போசிஸ் நிறுவனத்தின் செயற்பாடு ஊழியர்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த நிதியாண்டில், தகுதியுடைய ஊழியர்களுக்கு 5% முதல் 8% வரையிலான இரண்டு சுற்று சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகள் இன்போசிஸ் நிறுவனத்தின் "உயர்தர செயல்திறனுடன் கூடிய பணியிட பண்பாட்டை உருவாக்கும்" என்னும் நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.

facebook twitter