சென்னை ஐஐடி ரிசர்ச் பார்க்கில் உருவான ஆழ்நுட்ப ஸ்டார்ட்அப் ‘இம்பென்சஸ் எலெக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம், ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக ரூ.1.6 கோடி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியை நிறுவன வளர்ச்சி மற்றும் வர்த்தக செயல்பாடுகள் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிதிச்சுற்றில் Keiretsu பாரம் சென்னை கேபிடல் மற்றும் இன்44 கேபிடல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தேவதை முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
குரு விக்னேஷ் மற்றும் தினேஷ் நாராயணன் ஆகியோரால் துவக்கப்பட்ட இம்பென்சஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Impensus Electronics Private Limited) மூடப்பட்ட பழுக்க வைக்கும் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் எத்திலின் அடர்த்தி, வெப்பம், ஈரப்பதம் மற்றும் இதர நுண் காரணிகளை கண்காணித்து கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பு, அழுகி வீணாக கூடிய தயாரிப்புகளின் ஆயுளை அதிகரித்து, வீணாவதை குறைக்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் அதன் மொத்த காய்கறி, பழங்கள் விளைச்சலில் 25 சதவீதம் அறுவடைக்கு பின் வீணாவதாக கருதப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் வீணாகிறது. இதற்கு தீர்வாக அமையும் வழக்கமான சேவையாளர்களில் இருந்து இம்பென்சஸ் மாறுபட்டுள்ளது.
தாவரங்களில் பழுக்கும் தன்மையை தீர்மானிக்கும் எத்திலினை கட்டுப்படுத்தக் கூடிய சொந்தமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை நிறுவனம் கொண்டுள்ளது.
மேலும் பல்வேறு நுண் காரணிகளை ஒருங்கிணைந்த அமைப்பில் பயன்படுத்துகிறது. நிறுவனம் தற்போது, வாழை, ஆப்பிள், மாம்பழம், காளான் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. பிக்பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள், முன்னணி விநியோகிஸ்தர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்டுள்ளது.
நிறுவனம் தனியார் முதலீடு தவிர, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் ஆதரவு பெற்றுள்ளது.
“இந்தியாவின் குளிர்பதன வசதி உள்கட்டமைப்பு கடந்த பத்தாண்டுகளில் நன்கு வளர்ந்துள்ளது என்றாலும், சாம்பர் அளவிலான நுண் நிர்வாகம் இன்னமும் இடைவெளி கொண்டதாக உள்ளது. எங்கள் மேடை, பழங்கள் உள்ளிட்டவற்றின் ஆயுள் காலத்தை நிர்வகிக்கும் நுண் அம்சங்களை கட்டுப்படுத்த உதவுகிறது” என நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.குரு விக்னேஷ் கூறியுள்ளார்.
தங்கள் நிறுவனம் எதிர்பார்ப்பது போன்ற ஆழ்நுட்ப வாய்ப்புகளை இம்பென்சஸ் கொண்டுள்ளது என Keiretsu பாரம் சென்னை கேபிடல் பாட்னர் கவுதம் சர்வேஷ் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan