‘25 வயதுக்குள்ளான ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு குட் நியூஸ்’ - ரூ.100 கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த Masters’ Union

01:38 PM Apr 10, 2026 | YS TEAM TAMIL

குருக்ராமைத் தலைமையிடமாகக் கொண்ட Masters’ Union, 25 வயதிற்குட்பட்ட இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்களை ஆதரிக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பிலான ஆரம்ப கட்ட முதலீட்டு தளமான MU Ventures-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தளம், ஒரு குறிப்பிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வணிகமாக மாறும் ஆரம்ப நிலையான ’-1 முதல் 1’ கட்டத்தில் உள்ள இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ₹5 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை முதலீடு வழங்கப்படுவதுடன், தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அமைப்புகளும் வழங்கப்படுகின்றன.

Masters’ Union நிறுவனர் பிரதம் மிட்டல் கூறுகையில்,

“இளம் தலைமுறையினர் உள்ளூர் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்வதுடன், தொழில் தொடங்க தேவையான முதலீடும் வழிகாட்டுதலும் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டார்.”

இதனை சரிசெய்யும் நோக்கில், MU Ventures மிக வேகமான முடிவெடுக்கும் முறையை பின்பற்றுகிறது. பொதுவாக முதலீட்டு முடிவுகள் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படுகின்றன. எந்தத் துறைக்கும் மட்டும் கட்டுப்படுத்தப்படாத இந்த நிதி, அனைத்து வகையான தொழில் யோசனைகளுக்கும் திறந்துள்ளது.

இத்தளம் நான்கு முக்கிய பிரிவுகளின் மூலம் செயல்படுகிறது:

1. கல்வியை விட்டு வணிகம் தொடங்குபவர்களுக்கு Dropout Fund.

2.சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குபவர்களுக்கு Bharat Capital Fund.

3. இன்ஃப்ளூயன்சர்களால் உருவாக்கப்படும் தொழில்களுக்கு Content Creator Fund.

4. அமன் குப்தா போன்ற தொழில் முனைவோரின் ஆதரவுடன் Founders Union Fund ஆகியவை இதில் அடங்கும்.

முதலீட்டுடன் சேர்த்து, Google மற்றும் Amazon போன்ற நிறுவனங்களின் மென்பொருள் சேவைகளுக்கான டெக் கிரெடிட்கள், இணைந்து வேலை செய்யும் இடங்கள் போன்ற பல்வேறு ஆதரவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

MU Ventures நிர்வாக கூட்டாளி சாக்‌ஷம் கோட்டியா கூறுகையில்,

“இளம் இந்தியாவில் தொழில்முனைவு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய இயக்கியாக இருப்பதால் ஆரம்ப கட்ட ஆதரவு மிகவும் அவசியம்,” என தெரிவித்தார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட்அப்கள் சான் பிரான்சிஸ்கோ நகரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் முன்னணி தொழில்முனைவோரிடம் தங்களது வணிகத்தை அறிமுகப்படுத்தும் Demo Day நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். நாசா மற்றும் சாம்சங் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவும், சர்வதேச பேராசிரியர்களும் இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றனர்.

ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்வப்னா குப்தா கூறுகையில்,

“தொழில்முனைவு சூழலின் ஆரம்ப கட்டத்திலேயே தேவையான கட்டமைப்பு, சந்தை அணுகல் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்,” என்றார்.