+

ரூ.1,130 கோடி முதலீட்டில் மகாராஷ்டிராவில் பால் பதப்படுத்தல் ஆலை அமைக்க MilkyMist ஒப்பந்தம்!

இந்தியாவின் முன்னணி மதிப்பு கூட்டப்பட்ட பால் பண்ணை பொருட்கள் நிறுவனம் மில்கிமிஸ்ட் மகாராஷ்டிராவில் பெரிய அளவிலான பால் பதப்படுத்தல் மற்றும் பால் பொருட்கள் ஆலை அமைக்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி மதிப்பு கூட்டப்பட்ட பால் பண்ணை பொருட்கள் நிறுவனம் 'மில்கிமிஸ்ட்' (MilkyMist) மகாராஷ்டிராவில் பெரிய அளவிலான பால் பதப்படுத்தல் மற்றும் பால் பொருட்கள் ஆலை அமைக்க அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஆலை மொத்தம் ரூ.1130 கோடி முதலீடு கொண்டதாக இருக்கும் என்றும், 800 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு அளிக்கும், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னவிஸ் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நிறுவன சி.இ.ஒ. கே.ரத்தினம் செயல்படுத்தும் இந்த ஒப்பந்தம், தென்னிந்தியாவுக்கு வெளியே மேற்கொள்ளும் நிறுவன விரிவாக்கத்தின் முக்கிய அம்சமாகிறது.

Milkymist

இந்த ஒப்பந்தத்தின் படி, மில்கிமிஸ்ட் நிறுவனம், தினசரி 10 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட ஆலையை மகாராஷ்டிராவில் அமைக்கும். இதன் திறனை 25 லட்சம் லிட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யலாம். பன்னீர், யோகர்ட், சீஸ், ஐஸ்கிரீன், வெண்ணை, நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்த ஆலை கையாளும். இந்த ஆலைக்கான நிலத்தை மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக்கழகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னவிஸ் முன்னிலையில், ரூ.1130 கோடி முதலீடு செய்ய மில்கிமிஸ்ட் ஒப்பந்தம் போட்டது.

Milkymist expansion

இந்த திட்டம் ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்படும். ஆலைக்கான பால், மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

மில்கிமிஸ்ட் பின்னணி

தமிழ்நாட்டில் 1997ல் தொழில்முனைவோர் சதீஷ் குமாரால் துவக்கப்பட்ட ‘மில்கி மிஸ்ட்’ இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் நிறுவனமாக உருவாகி இருக்கிறது. இது உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் செயல்படுகிறது.

இந்நிறுவனம் மகாராஷ்டிராவில் அமைக்க உள்ள ஆலை மேற்கு இந்தியாவில் நிறுவன விரிவாக்கத்தை வலுவாக்கும்.

“விவசாயிகள் மற்றும் சமூதாயத்திற்கு நீடித்த பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியாவில் பால் பண்ணை பொருட்கள் சார்ந்த விநியோகச் சங்கிலியை வலுவாக்கும் எங்கள் ஈடுபாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது,” என சி.இ.ஓ. கே.ரத்தினம் கூறியுள்ளார்.

Edited by Induja Raghunathan

facebook twitter