60 ஆண்டு பழைய வருமான வரிச் சட்டத்தை மாற்றும் புதிய வருமானவரி மசோதா மக்களைவையில் நிறைவேற்றம்!

04:42 PM Aug 13, 2025 | muthu kumar

திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் புதிய வருமான வரி மசோதா 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் பழைய வருமானவரிச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் முகமாக மக்களவையில் நிறைவேற்றம் கண்டது.

எந்த புதிய வரிவிகிதமும் இல்லை!

இன்று மாநிலங்களவையில் வருமான வரி மசோதா 2025-ஐ முன்மொழிந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

இந்தத் திருத்தப்பட்ட மசோதா எந்த புதிய வரி விகிதத்தையும் விதிக்கவில்லை என்றும், சிக்கலான வருமான வரிச் சட்டங்களைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான மொழியை மட்டுமே எளிமைப்படுத்துகிறது என்றும் கூறினார்.

புதிய மசோதா தேவையற்ற விதிகள் மற்றும் பழமையான மொழியை நீக்கி, 1961 ஆம் ஆண்டு வருமானச் சட்டத்தில் 819 பிரிவுகளின் எண்ணிக்கையை 536 ஆகவும், அத்தியாயங்களின் எண்ணிக்கையை 47 இலிருந்து 23 ஆகவும் குறைத்துள்ளது.

புதிய வருமான வரி மசோதாவில் வார்த்தைகளின் எண்ணிக்கை 5.12 லட்சத்திலிருந்து 2.6 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது, மேலும், முதல் முறையாக, தெளிவை மேம்படுத்த 1961 சட்டத்தின் அடர்த்தியான உரையை மாற்றியமைத்து 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 புதிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

"இந்த மாற்றங்கள் வெறும் மேலோட்டமானவை அல்ல; அவை வரி நிர்வாகத்திற்கான ஒரு புதிய, எளிமைப்படுத்தப்பட்ட அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. இந்த எளிய மற்றும் அதிக கவனக்குவிப்பு மேற்கொள்ளப்பட்ட சட்டம் எளிதாகப் படிக்க, புரிந்துகொள்ள மற்றும் செயல்படுத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார் நிர்மலா சீதாராமன்

இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதன் நோக்கம், புரிந்துகொள்ளத் தேவையான மொழியையும் தெளிவையும் எளிமைப்படுத்துவதாகும் என்று கூறினார்.

கோவிட் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வருமான வரி மசோதா, 2025 உடன், வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025-யும் அவை திங்களன்று மக்களவைக்கு திருப்பி அனுப்பியது, இந்த நிதி மசோதாக்கள் திங்களன்று நிறைவேற்றப்பட்டன.

எதிர்கட்சிகள் மீது நிதியமைச்சரின் விமர்சனம்:

எதிர்க்கட்சி பங்கேற்க விரும்பாதது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் மசோதாவை விவாதிக்க அலுவல் ஆலோசனைக் குழுவில் எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன

"நீங்கள் எதையும் விவாதிக்க விரும்பவில்லை, நாங்கள் விவாதம் செய்ய விரும்புகிறோம். மக்களவையில் 16 மணி நேர விவாதத்திற்கும், இங்கே (மாநிலங்களவை) 16 மணி நேர விவாதத்திற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்... இன்று அவர்கள் எங்கே?" என்றார் நிர்மலா சீதாராமன்.

புதிய சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருவதால், புதிய சட்டத்தை செயல்படுத்த வருமான வரித் துறையின் கணினி அமைப்புகள் மறுதொடக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து வரிச் சலுகைகளும் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசாங்கம் ஜூலை மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.