பிரட்யூசர்பசார் தாய் நிறுவனம் 'ஃபிப்செயின்' (Fipchain), ஏ சுற்றுக்கு முந்தைய சமபங்கு நிதி திரட்டுவதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 'ரிவர் வென்சர்ஸ்' தலைமையிலான இந்த சுற்று, உலக அளவிலான அறிவுசார் சொத்துரிமை வணிகத்திற்கான நிறுவன உள்கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனத்தின் நோக்கத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த நிதிச்சுற்றில், வென்சர் ஃபோர்ஜ் லாப்ஸ் (Venture Forge Labs), தொழில்முனைவோர் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் சந்து நாயர், இந்தியா, அமீரகம், ஜெர்மனியைச் சேர்ந்த கூட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
உலக அளவிலான டிவி, வீடியோ, ஏஐ உள்ளடக்கத்திற்கான அறிவுசார் சொத்துரிமை சந்தையில் அர்த்தமுள்ள சந்தைப்பங்கை பெறுவதற்கான நிறுவனத்தின் நீண்ட கால நோக்கத்திற்கு இந்த நிதி உதவும் என இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தற்போது, இந்த சந்தை 28 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டுள்ளது. 2029ல் 47 பில்லியன் டாலர் கொண்டதாக வளரும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவில் இந்தியா இரண்டாவது வேகமாக வளரும் சந்தையாக உருவாகும், என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் நுகர்வு அதிகரிப்பது, எல்லைகள் கடந்த உரிமம், ஸ்டீரிமிங் ஆகியவை இதற்கு உதவும் என கருதப்படுகிறது.
ஸ்டீரீமிங், ஏஐ சார்ந்த உள்ளடக்கம், சர்வதேச விரிவாக்கம் காரணமாக டிஜிட்டல் கிரியேட்டர் பொருளாதாரம் 2030ல் 7 டிரில்லியன் டாலரை கடக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய உள்ளடக்க உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருந்தும், உலக அளவிலான ஐபி வணிகத்திற்கான உள்கட்டமைப்பு பிளவுபட்டதாக இருக்கிறது.
தற்போது, வாழ்நாள் சுழற்சி நிர்வாகம், உரிமங்கள் அறிவு, வளர்த்தெடுக்கக் கூடிய பரிவர்த்தனை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்தியா சார்ந்த ஐபி பரிமாற்ற மேடை எதுவும் இல்லை. இந்த இடைவெளியை ஃபிப்செயின் போக்க விரும்புகிறது.
ஃபிப்சைன் நிறுவனத்தின் அங்கமான பிரட்யூசர் பசார், திரைப்படங்கள், தொடர்கள், ஊடகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை கண்டறிதல், உரிமம் பெறுதல், பணமாக்கல் டிஜிட்டல் மேடையாக விளங்குகிறது. கிரியேட்டர்கள், ஸ்டூடியோக்கள், ஒடிடி மேடைகள் மற்றும் சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள், எல்லைகளைக் கடந்த முறையான பரிவர்த்தனையை மேற்கொள்ள இந்த மேடை உதவுகிறது.
இந்நிறுவனம் சந்தை சார்ந்த பரிவர்த்தனை தவிர, ஐபி சுழற்சி சூழல் சார்ந்த ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க முற்படுகிறது. இந்த சுற்று மூலமான நிதி, மைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த மற்றும் சர்வதேச விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.
“இந்த நிதி திரட்டல் வளர்த்தெடுக்கும், திறந்த தன்மை கொண்ட அறிவுசார் சொத்துரிமை சந்தையை உருவாக்கும் எங்கள் நோக்கத்தில் முக்கிய மைல்கல்,” என்று ஃபிப்சைன் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஜி.கே.திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
“அதிக தரமான ஐபி உரிமைக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருகிறது. இதில் உள்ள செயல்திறன் அற்ற தன்மையை நீக்கி, ஸ்டூடியோ, மேடைகளுக்கு எல்லைகள் கடந்த அதிக மதிப்பிலான பரிவர்த்தனைக்கு உதவுவது எங்கள் நோக்கம்,” என்று இணை நிறுவனர் மற்றும் முதன்மை வர்த்தக அதிகாரி டி.விஜய் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan